கொஞ்சம் Technique கொஞ்சம் English - 289: கடந்த காலத்தை மாற்ற முயற்சிக்கலாமா

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 289: கடந்த காலத்தை மாற்ற முயற்சிக்கலாமா
Updated on
1 min read

பாட்டி: அந்த நோட்டு மறந்த கதையை மறுபடியும் இப்போது பேசுவோம்.

இசை: ஏன் பாட்டி?

பாட்டி: அதுல இன்னும் சில விஷயங்கள் இருக்குது.

உமையாள்: அது என்ன?

பாட்டி: வீட்டை விட்டு கிளம்பும் போது, அக்கா உனக்கு ஞாபகப்படுத்தினாள் தானே.

இனியன்: ஆமாம் பாட்டி.

பாட்டி: அக்கா சொல்லியிருந்ததை நீ கேட்டிருந்தால், நீ திட்டு வாங்கியிருக்க மாட்டேல்ல.

இனியன்: அது உண்மை தான்.

பாட்டி: இப்போ நான் சொன்ன இந்த வாக்கியத்திற்கு Third conditional statement என்று பெயர்.

மித்ரன்: அப்படியா.

உமையாள்: இன்னும் கொஞ்சம் விளக்குங்களேன்.

பாட்டி: அந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது இல்லையா?

மித்ரன்: ஆமாம்.

பாட்டி: அப்படியென்றால், அந்த நேரம் கடந்து விட்டது என்று சொல்லலாமா?

இசை: சொல்லலாமே. நேற்றே நடந்து விட்டது. Past tense.

பாட்டி: அதை இனிமேல் போய் மாற்ற முடியுமா?

உமையாள்: முடியவே முடியாது.

இனியன்: திட்டு வாங்கினது வாங்கினது தான்.

பாட்டி: அந்த சம்பவத்தை மாற்றி செய்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் வடிவம் தான் Third conditional statement.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in