கொஞ்சம் Technique கொஞ்சம் English - 288: Second conditional statement - தொடர்கிறது

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 288: Second conditional statement - தொடர்கிறது
Updated on
1 min read

பாட்டி: கற்பனையில் வரும் conditional statement ஐ நேற்று பார்த்தோம் இல்லையா?

இசை: ஆமாம் பாட்டி. கற்பனையாக ஒன்று நடந்தால், அதை எப்படி ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்று சொல்லி கொடுத்தீங்க.

இனியன்: அதற்கு பெயர் second conditional statement.

பாட்டி: கற்பனை என்பது உண்மையற்ற நிலை என்பது புரியுதா?

உமையாள்: நல்லாவே புரியுது பாட்டி.

பாட்டி: இங்கு, இந்த கற்பனையின் முடிவு, அந்த உண்மையற்ற நிலைக்கு தொடர்புடையதாக, சாத்தியமுள்ளதாக இருக்க வேண்டும்.

மித்ரன்: புரியலையே பாட்டி.

பாட்டி: உனக்கு இறக்கை இருந்தால் நீ என்ன செய்வாய் என்று சொல்ல முடியுமா?

இனியன்: எனக்கு இறக்கை இருந்தால் நான் பறப்பேன்.

பாட்டி: உனக்கு இறக்கை இருந்தால் நீச்சல் அடிப்பாய் என்று நான் சொன்னால் நீ என்ன செய்வாய்?

இனியன்: சத்தமாக சிரிப்பேன் பாட்டி. அதெப்படி இறக்கை இருந்தால் நீச்சல் அடிக்க முடியும். பறக்க தான் முடியும்.

உமையாள்: இறக்கை இருந்தால் பறப்பேன் என்பது சாத்தியமான முடிவு.

பாட்டி: மனிதர்களுக்கு இறக்கை முளைப்பது என்பது கற்பனை.

இனியன்: ஆமாம்.

பாட்டி: ஒரு கற்பனையை காணும் போது, அதன் முடிவு கற்பனையை ஒட்டி சாத்தியமானதாக இருக்க வேண்டும்.

உமையாள்: சாத்தியம் இல்லாததை இங்கு கொண்டு வரக் கூடாது.

இசை: கற்பனையோடு தொடர்பு உடையதால், past tense இல் conditional clause statement இருக்க வேண்டும் என்றும் நேற்று சொன்னீங்க..

பாட்டி: ஆமாம். அது மிக முக்கியமான rule.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in