

பாட்டி: First conditional statement இல் உள்ள Conditional clause ற்குள் வரும் நேரம் நிகழ்காலமாகவோ (present time) அல்லது எதிர்காலமாகவோ (future time) இருக்கலாம்.
இசை: Conditional clause ற்குள்ளும் future tense வருமா?
பாட்டி: இது future tense இல்லை. அதில் வரும் நேரம் எதிர்காலம் என்று சொல்கிறேன்.
மித்ரன்: புரியலையே பாட்டி
பாட்டி: நேற்று நாம் பார்த்த examples அனைத்திலும் நிகழ்காலத்தை சார்ந்த நேரம் இருந்தது.
இனியன்: One-minute பாட்டி. நேற்றைய topic ஐ கொஞ்சம் திருப்பி பார்த்துகிறேன்.
பாட்டி: திருப்பி பார்த்தாச்சா. இப்போ எதிர்கால நேரத்தை கொண்டு இருக்கக் கூடிய ஒரு வாக்கியம் சொல்லுறேன். கவனிங்க.
பாட்டி: If you study for more time tomorrow, you will pass the exam the day after tomorrow. (நாளை அதிக நேரம் படித்தால், நாளை மறுநாள் தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள்.)
உமையாள்: இப்போ புரியுது.
பாட்டி: Conditional clause ற்குள் வரும் நேரம் நிகழ்காலமாகவோ அல்லது எதிர்காலமாகவோ இருந்தால், Main clause இல் வரும் நிலைமை உண்மையானதாகவும் சாத்தியமானதாகவும் இருக்கும் போது First conditional statement ஐ நாம் பயன்படுத்த வேண்டும்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்