கொஞ்சம் Technique கொஞ்சம் English 284 - If இல் வரும் பொதுவான உண்மைகள்!

கொஞ்சம் Technique கொஞ்சம் English 284 - If இல் வரும் பொதுவான உண்மைகள்!
Updated on
1 min read

பாட்டி: Zero Conditional ஐ எங்கு பயன்படுத்தலாம்னு சொல்லுங்க?

இசை: பொதுவான உண்மைகள் வரக்கூடிய இடத்தில், Zero Conditional ஐ பயன்படுத்தலாம்னு சொன்னீங்க பாட்டி.

பாட்டி: இங்கு ஒரு முக்கியமான rule ஐ நாம் கவனிக்க வேண்டும்.

இனியன்: என்ன பாட்டி அது?

பாட்டி: பொதுவான உண்மைகள், எப்போதுமே மாறாது இல்லையா?

மித்ரன்: சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது பொதுவான உண்மை.

இசை: இது கண்டிப்பாக எந்த காலத்திலும் மாறாது.

பாட்டி: Correct. If என்பது என்ன?

உமையாள்: If என்பது ஒரு conjunction.

பாட்டி: If statement இல் இரண்டு clause இருக்கும் சரியா?

இசை: ஆமாம் பாட்டி. ஒன்று conditional clause மற்றொன்று main clause.

உமையாள்: If வரக்கூடிய part ஐ conditional clause என்று சொல்வோம்.

பாட்டி: பொதுவான உண்மைகள் சார்ந்த விஷயங்கள் conditional clause இல் வரும்போது, main clause ஆனது simple present tenseஇல் இருக்க வேண்டும் என்பது rule.

இனியன்: ஆனால், if conjunction -ஐ பயன்படுத்தும்போது main clause ஆனது future tense இல் வர வேண்டும் என்று படித்திருக்கிறோமே.

மித்ரன்: அப்படியென்றால் இரண்டில் எது சரி பாட்டி?

பாட்டி: இரண்டுமே சரி தான். main clause ஆனது Present tense இல் வந்தால், அது zero conditional statement. Future tense இல் வந்தால், first conditional statement.

உமையாள்: நீங்க சொல்லுறதை பார்த்தால், ஒவ்வொரு conditional statements ற்கும் ஒரு rule இருக்கிறது போலத் தெரியுதே

பாட்டி: Correct. மூன்று conditional statements ம் ஒவ்வொரு விதமான rule ஐக் கொண்டிருக்கிறது.

பாட்டி: இன்று சில zero conditional statements ஐ நாம் பார்க்கலாம்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in