கொஞ்சம் Technique கொஞ்சம் English - 283: Zero Conditional ஐப் பற்றி தெரியுமா!

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 283: Zero Conditional ஐப் பற்றி தெரியுமா!
Updated on
1 min read

பாட்டி: Conditionals ன்னா என்ன?

இசை: இப்படி இருந்தால், இப்படி ஆகும்னு சொல்லுவோமே அது தான்.

பாட்டி: ஒரு example சொல்லு.

இனியன்: நான் நடந்து போனால், எனக்கு கால் வலிக்கும்.

மித்ரன்: If I walk, I will get leg pain.

பாட்டி: Good. இது ஒரு conditional statement . இது என்ன type ன்னு சொல்ல முடியுமா?

இசை: Type ஆ? அப்படின்னா என்ன?

பாட்டி: Conditional statement (நிபந்தனை) எப்போதும் ஒரே மாதிரி இருக்குமா?

உமையாள்: அதெப்படி இருக்க முடியும்?

இசை: நேரம் காலம் எல்லாம் இருக்குதுல்ல. அதை பொறுத்து மாறும்.

பாட்டி: Correct. இதில் 3 types இருக்குது.

Zero Conditional 2. First Conditional

3. Second Conditional

உமையாள்: Zero Conditional ன்னா என்ன பாட்டி?

பாட்டி: பொதுவான உண்மைகளை சார்ந்து சொல்லக் கூடிய conditional statements ஐ zero conditionals என்று சொல்லலாம்.

இனியன்: மேகம் வந்தால் மழை பெய்யும்.

மித்ரன்: மழை பெய்தால் மண் வாசனை வரும்.

பாட்டி: அதே அதே.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in