

இசை: ரொம்ப வெயிலா இருக்குது. ஜூஸ் குடிக்கலாமா?
இனியன்: நானும் அதை தான் நினைச்சேன்..
உமையாள்: என்ன ஜூஸ் குடிக்கலாம்?
மித்ரன்: வீட்ல, குடிக்க என்ன இருக்குது.
இசை: தண்ணீர் தான் இப்போதைக்கு குடிக்க இருக்குது.
மித்ரன்: Fruits எதாவது இருக்குதா?
இசை: தர்பூசணி இருக்குது. ஆரஞ்சு இருக்குது. மாதுளை இருக்குது. உனக்கு என்ன வேணும்?
மித்ரன்: ஆரஞ்சு புளிப்பா இருக்கும். எனக்கு வேண்டாம்.
உமையாள்: மாதுளை கொஞ்சம் துவர்ப்பா இருக்கும். எனக்கு வேண்டாம்.
இனியன்: தர்பூசணி தான் இனிப்பா இருக்கும்.
மித்ரன்: எல்லாருக்குமே இனிப்பு பிடிக்கும்.
உமையாள்: அப்போ சரி. வாங்க எல்லாரும். தர்பூசணியை வெட்டி துண்டு போடுவோம்.
இசை: ஒரு பெரிய பாத்திரத்தை எடுங்க.
மித்ரன்: Mixer jar ஒருத்தர் எடுத்துட்டு வாங்க
இனியன்: இதுக்கு சர்க்கரை எதுவுமே தேவை இல்லை.
இசை: தர்பூசணி பழமே ரொம்ப இனிப்பா தான் இருக்கும்.
பாட்டி: நீங்க எல்லாரும் சேர்ந்து juice போடுங்க. அப்படியே உங்க காதை எங்கிட்ட கொடுங்க.
உமையாள்: சொல்லுங்க பாட்டி. கவனிக்கிறோம்.
பாட்டி: Compare and contrast என்று ஒரு concept இருக்குது.
மித்ரன்: அதென்ன concept?
பாட்டி: ஒரு fruit juice போடணும்னு முடிவு பண்ணுனீங்க, சரியா?
உமையாள்: ஆமாம்.
பாட்டி: அதுக்கு பிறகு என்ன நடந்தது?
இசை: என்ன fruits லாம் இருக்குது ன்னு பார்த்தோம்.
பாட்டி: அப்புறம்?
இனியன்: Juice போடலாம் ன்னு முடிவு பண்ணினோம்.
பாட்டி: அத்தனை பழங்களிலுமா?
மித்ரன்: ஐயோ, இல்லை பாட்டி.
இனியன்: இவனுக்கு புளிப்பு பிடிக்காதுன்னு சொன்னான். அதனால் ஆரஞ்சு juice வேண்டாம் ன்னு முடிவு எடுத்தோம்.
பாட்டி: அடுத்து?
இசை: இவளுக்கு துவர்ப்பு பிடிக்காதுன்னு சொன்னாள். அதனால் மாதுளையை யை ஒதுக்கிட்டோம்.
மித்ரன்: எல்லாருக்கும் பிடிச்ச இனிப்பை தேர்ந்தெடுத்தோம். தர்பூசணி juice ரெடி ஆகிட்டு இருக்குது.
பாட்டி: இங்கே, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை பிரிச்சி பார்த்தீங்களா?
இனியன்: இப்போ தான் கவனிக்கிறேன் நான்.
பாட்டி: இதற்கு பேர் தான் compare and contrast.
மித்ரன்: அப்போ ஒற்றுமை வேற்றுமை என்பது இது தானா?
பாட்டி: Yes. இன்று நீங்க ஜூஸ் போட்டதில், பொதுவான உண்மைகள் என்ன இருக்குது ன்னு சொல்லுங்க பார்க்கலாம்.
இசை: எல்லாமே பழங்கள் பாட்டி.
பாட்டி: Vs என்றால் என்ன தெரியுமா?
மித்ரன்: தெரியாது பாட்டி.
பாட்டி: versus என்ற வார்த்தையின் abbreviation தான் vs.
இனியன்: அப்படி என்றால் என்ன பாட்டி?
பாட்டி: Compare செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய வார்த்தை இது.
உமையாள்: ஓ. சரி பாட்டி.
பாட்டி: எழுதும் போது மட்டுமே இந்த vs எழுத்துக்கள் பயன்படுகிறது.
இசை: அப்படியா?
பாட்டி: இதன் மூலம் இரண்டு பொருட்களை அல்லது விஷயங்களை நாம் compare செய்கிறோம் என்பதை குறிப்பால் உணர்த்துகிறோம்.
உமையாள்: Apple vs Orange vs Watermelon.
இசை: All are fruits.
பாட்டி: Excellent. நிறைய examples நாளை பார்க்கலாம்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்