

பாட்டி: உலகில் மொத்தம் எத்தனை பெருங்கடல்கள் இருக்குது தெரியுமா?
இசை: “உலகில் ஐந்து பெருங்கடல்கள் மற்றும் ஏழு கண்டங்கள் உள்ளது” என நாங்க படிச்சிருக்கிறோம்.
உமையாள்: இந்த பெருங்கடல்களுக்கு கீழே நிறைய பவளப்பாறைகள் இருக்குமாம்.
பாட்டி: ஆமாம். பவளப்பாறைகள் இருக்கும் இடத்தில் கடல்வாழ் உயிரினங்கள் நிறைய இருக்கும்.
இனியன்: கடற்கொள்ளையர்கள் கூட இதேபோன்ற ஆழ்கடல்களுக்குத்தான் கொள்ளையடிக்க வருவார்களாம்.
இசை: படத்தில் கூட பார்த்திருக்கிறோமே
மித்ரன்: திமிங்கலம் போன்ற பெரிய உயிரினங்கள் வாழ ஆழ்கடல்கள் உதவுகின்றன அப்படீனு கேள்விப்பட்டு இருக்கிறேன்.
உமையாள்: அது உண்மை தான்.
பாட்டி: கடல் (sea) என்ற வார்த்தைக்கு plural என்ன?
மித்ரன்: கடல்கள். ஆங்கிலத்தில் seas.
பாட்டி: இதே உச்சரிப்போடு இன்னுமொரு வார்த்தை இருக்குது. அது seize.
இனியன்: இதற்கு என்ன அர்த்தம் பாட்டி?
பாட்டி: Seize என்றால் கைப்பற்று என்று அர்த்தம்.
இசை: அந்த காலத்தில் மன்னர்கள் எல்லாம் படையெடுத்து போய், பக்கத்துக்கு நாடுகளையெல்லாம் கைப்பற்றுவாங்களே.
பாட்டி: Correct. அதுதான் இந்த Seize.