கொஞ்சம் technique கொஞ்சம் English - 278: செல்லை வாங்க முடியுமா!?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 278: செல்லை வாங்க முடியுமா!?

Published on

இசை: ஒரு cell வாங்கிட்டு வர முடியுமா?

இனியன்: என்ன செல்?

உமையாள்: Cell (அலைபேசி) வாங்க நிறைய பணம் வேணும்.

மித்ரன்: Cell ஐ (சிறைக்கூடம்) எப்படி வாங்க முடியும். போய் உட்கார தான் முடியும்.

இனியன்: உடம்புக்குள்ள இருக்குற Cell (உயிரணு) இல் எப்படி உட்கார முடியும்?

இசை: அய்யா சாமி, தெரியாம cell ன்னு சொல்லிட்டேன். Battery cell (மின்கலம்)ன்னு உங்க கிட்ட சொல்லியிருக்கணும்.

பாட்டி: இடத்தை பொறுத்து நிறைய அர்த்தங்கள் cell க்கு இருக்குது.

உமையாள்: இசை, நீ தெளிவா சொல்லியிருக்கணும்.

பாட்டி: தேனிக்கூட்டையும் cell ன்னு தான் சொல்வோம். சிறிய அறை என்ற அர்த்தமும் cell க்கு உண்டு.

இனியன்: ஓ இதுவுமா!

பாட்டி: இதே உச்சரிப்பில் இன்னுமொரு செல் உண்டு.

மித்ரன்: அது என்ன?

பாட்டி: விற்பனை செய்வதற்கு செல் (sell) என்று பெயர்.

இசை: “Cell” and “Sell” are homophones. Am I right?

பாட்டி: You are right.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in