

இனியன்: அங்கே பாரேன்... அந்த bull ride game-ல நாமும் ஏறுவோமா...
இசை: வேண்டாம். வேகமா சுத்துறாங்க. நாம கீழ விழுந்திடுவோம்.
மித்ரன்: கீழே விழுறதும் fun தான்.
இனியன்: நம்மள கீழ தள்ள தானே சுழட்டி சுழட்டி சுத்துறாங்க. வாங்க கேட்டு பார்ப்போம்.
மித்ரன்: You are not allowedன்னு எனக்கு சொல்லிட்டாங்க.
இசை: ஏன்?
மித்ரன்: 10 yearsக்கு மேல இருக்கணுமாம். ஆனால், இனியனுக்கு allowed ன்னு சொல்லிட்டாங்க?
இனியன்: நான் height ஆ இருக்கேன்ல.
(Ride ற்கு பின்னர்)
உமையாள்: இனியா, நீ நடந்து போனதை பார்த்ததும் பெரிய வீரன்னு நினச்சிட்டோம் டா.
இனியன்: ஹ்க்கும். இங்க இருக்கும்போது இதெல்லாம் எனக்கு ரொம்ப சாதாரணம்னு நெனச்சேன்.
மித்ரன்: கிகிகிக்கி! பார்த்தோம் பார்த்தோம். நீ கத்துன கத்துல (aloud) எங்க காதே கிழிஞ்சிடுச்சு.
இனியன்: நீ வேற, அந்த uncle எப்படி வேகமா சுத்தினார்னு ஏறுனாதான் உங்களுக்கு தெரியும்.
பாட்டி: இங்கே ஒரு similar sound words வந்தது தெரியுமா?
இசை: தெரியலையே பாட்டி.
உமையாள்: அதை ஒரு sentence ஆ எங்களுக்கு சொல்லுங்க
பாட்டி: Iniyan is allowed to play the bull-ride game aloud. (காளை சவாரி விளையாட்டை சத்தமாக விளையாட இனியன் அனுமதிக்கப்படுகிறான்.)
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்