

இனியன்: இன்னைக்கு காலையில் நான் ஒன்னு பார்த்தேன்.
இசை: என்ன பார்த்தாய்?
இனியன்: அது குட்டியா இருந்தது.
இசை: ஓஹோ!
இனியன்: அதோட முடியெல்லாம் வெள்ளையா இருந்தது.
உமையாள்: சரி
இனியன்: புசு புசுன்னு பஞ்சு போல அதோட உடம்பு இருந்தது.
பாட்டி: வேற
இனியன்: அது துள்ளி துள்ளி போச்சா...
மித்ரன்: அப்புறம்
இனியன்: அதை பிடிக்க கையை நீட்டுனேன்...
பாட்டி: பிடிச்சியா இல்லையா?
இனியன்: பொத்துன்னு கீழ விழுந்திட்டேன்
இசை: கல் எதுவும் தட்டி விட்டுடுச்சா..
இனியன்: இல்லை, எல்லாமே கனவு
உமையாள்: கனவுல முயலைப் பார்த்துட்டு வந்திருக்கான்.
மித்ரன்: அந்த கதையை இப்படி நீட்டி முழக்கிட்டு இருக்கிறான்.
இனியன்: சொல்லுங்க, என்னோட Hare ன் hair எப்படி இருந்தது.
மித்ரன்: ஹ்க்கும். புசு புசுன்னு இருந்தது.
பாட்டி: Wow! நீங்களே homophones கண்டுபிடிக்க ஆரம்பிச்சிட்டிங்களே. Good job!
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்