கொஞ்சம் technique கொஞ்சம் English - 271: ரோமை ஒரே நாளில் கட்ட முடியுமா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 271: ரோமை ஒரே நாளில் கட்ட முடியுமா?

Published on

உமையாள்: Wow. That’s so nice. (ஆஹா. அது மிகவும் அருமையாக இருக்கிறது.)

இசை: You have done it very well. (மிகச் சிறப்பாக செய்திருக்கிறாய்)

மித்ரன்: Iniyan has designed a toy well excellently. (இனியன் ஒரு பொம்மை கிணற்றை சிறப்பாக வடிவமைத்துள்ளான்.)

பாட்டி: But look at him. He is not happy with what he is doing? (ஆனால் அவனைப் பாருங்கள். அவனுக்கு மகிழ்ச்சி இல்லாதது போலத் தெரிகிறது.?)

இசை: Yes. Even I noticed. (ஆம். நானும் கவனித்தேன்.)

உமையாள்: Iniya, why are you so worried? (நீ ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய் இனியா?)

இனியன்: I need to complete my project. (நான் எனது project-ஐ முடிக்க வேண்டும்.)

மித்ரன்: What! You have done it already, right? (என்ன! நீ ஏற்கெனவே செய்து முடித்துவிட்டாய் அல்லவா?)

இனியன்: No. It is not completed. The glue is yet to dry. (இல்லை. அது முழுமையடையவில்லை. பசை இன்னும் உலரவில்லை.)

இசை: When did you apply the glue? (நீ எப்போது ஒட்டினாய்?)

இனியன்: Just before 5 mins. (5 நிமிடங்களுக்கு முன்பு.)

உமையாள்: Then, how is it possible? (அப்படியெனில், அது எப்படி சாத்தியம்?)

இசை: You have to give it some time to stick nicely. (நன்றாக ஒட்டிக்கொள்ள நீ சிறிது நேரம் கொடுக்க வேண்டும்.)

பாட்டி: It will take some time. Meanwhile, you can do some other work. (சிறிது நேரம் எடுக்கும். இதற்கிடையில், நீ வேறு வேலை செய்யலாம்.)

இனியன்: If glue sticks it properly, I can operate the well perfectly during the event. (பசை சரியாக ஒட்டிக்கொண்டால், நிகழ்வின் போது என்னால் கிணற்றை சரியாக இயக்க முடியும்.)

பாட்டி: I agree, But, “Rome wasn't built in a day”. (நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் “ரோம் ஒரு நாளில் கட்டப்பட்டது அல்ல”.)

இனியன்: Rome is the capital of Italy.

மித்ரன்: அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் பாட்டி

பாட்டி: "ரோம் ஒரு நாளில் கட்டப்படவில்லை (உருவாக்கப்படவில்லை)" என்பது ஒரு proverb (பழமொழி)

இனியன்: புரியலையே பாட்டி.

பாட்டி: இது காய்ந்தால் மட்டுமே உன்னால் இந்த கிணற்றை operate செய்ய முடியும். சரியா?

இனியன்: ஆமாம் பாட்டி.

பாட்டி: இப்போது நீ என்ன பண்ணனும்.

இனியன்: அவசப்பரப்படாமல் காயுற வரைக்கும் பொறுமையா இருக்கணும்.

பாட்டி: அதைதான் இந்த proverb மூலமா உங்களுக்கு சொன்னேன்.

மித்ரன்: கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன் பாட்டி.

பாட்டி: சிக்கலான வேலைகளுக்கு அதிக நேரம் எடுக்கும்போது அவசரப்படக் கூடாது என்ற கருத்தை இந்த proverb சொல்கிறது.

இசை: Wow, இன்னைக்கு ஆங்கிலப் பழமொழி ஒன்னு தெரிஞ்சிக்கிட்டோம்.

பாட்டி: பிரான்ஸ் நாட்டில் சொல்லப்பட ஆரம்பித்த இந்த பழமொழி, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது.

பாட்டி: ஒரு இலக்கை நோக்கிச் செயல்படும்போது பொறுமை, விடாமுயற்சி மற்றும் படிப்படியான முன்னேற்றத் தின் முக்கியத்துவத்தை இந்த proverb வலியுறுத்துகிறது.

இனியன்: சரி பாட்டி. இது எல்லாம் காயுறவரை நானும் காத்திருக்கிறேன்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in