கொஞ்சம் technique கொஞ்சம் English - 270: குரங்குடன் விளையாடினோம்

கொஞ்சம் technique கொஞ்சம் English - 270: குரங்குடன் விளையாடினோம்
Updated on
2 min read

இனியன்: இன்னைக்கு park ல என்ன நடந்தது தெரியுமா?

மித்ரன்: நானும் இனியனும் popcorn சாப்டுட்டு ஒருத்தரை ஒருத்தர் தொட்டு பிடிச்சு விளையாடிட்டு இருந்தோம்.

இனியன்: இசை அக்கா அங்க இருக்குற ஒரு bench ல உட்காந்திருந்தாங்க.

மித்ரன்: ரொம்ப நேரமா அங்க ஒரு குரங்கு நின்னுட்டு இருந்தது.

இனியன்: சும்மாவே இருக்குதேன்னு ஒரு சின்ன கல்லை தூக்கி அது பக்கத்துல நான் போட்டேன்.

மித்ரன்: அது ஒரே ஓட்டமா எங்களை பார்த்து ஓடி வந்துச்சு.

இனியன்: அதை பார்த்ததும் நாங்க இரண்டு பேரும் இசை அக்காவை நோக்கி ஓடினோம்.

மித்ரன்: அந்த குரங்கு எங்களை விடாம தொரத்திட்டு வந்தது.

இனியன்: நாங்க அக்காவை சுத்தி சுத்தி ஓடுறோம். அதுவும் எங்களை துரத்திட்டே வருது.

மித்ரன்: ஒருவழியா, பக்கத்து கடையில் இருந்த மாமா வந்து குரங்கை விரட்டி விட்டார்.

இனியன்: அக்கா, இப்போ சொல்லுங்க. எதுக்கு எங்களை காப்பாத்தலைன்னு.

இசை: நீ அதை பயமுறுத்த போய் அது உன்னை பயமுறுத்திடுச்சு.

இனியன்: இருந்தாலும் நாங்க உங்க தம்பிங்க. எங்களுக்கு பாடம் எடுக்க இதுவா நேரம்?

இசை: அந்த குரங்கு ரொம்ப குட்டி குரங்கு. அது ஜாலியா தானே உங்ககிட்ட விளையாடிட்டு இருந்தது.

உமையாள்: இன்னொரு விஷயமும் இருக்குது.

இனியன்: What is that?

உமையாள்: “உங்களை கடிச்சா நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்டுவேன். என்னை கடிச்சா யாரு கூட்டிட்டு போவாங்க” ன்னு இசை யோசிச்சிருக்கலாம்.

இசை: செம காமெடி இது.

இனியன்: குரங்கு கிட்ட மனிதனுடைய தன்மைகள் இருக்கும்னு சொல்லுறாங்களே. இது சரியா பாட்டி.

பாட்டி: எல்லாமே அப்படி கிடையாது. அதிகப்படியான தன்மைகள் ஒத்து போகிற மாதிரி சிம்பன்சி (Chimpanzee), போனபோ(Bonobo), கொரில்லா (Gorilla) ஆகிய மூன்று வகை குரங்கினங்கள் இருந்ததாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது

உமையாள்: இதுல சிம்பன்சி யும் போனபோயும் கிட்டத்தட்ட 99% , கொரில்லா 98% அப்படியே மனிதர்களோடு ஒத்து போகும்ன்னு நானும் படிச்சிருக்கிறேன்.

மித்ரன்: அடேங்கப்பா.

பாட்டி: இங்க Gorilla pronunciation உடைய இன்னொரு வார்த்தை இருக்குது. Guerrilla. இதற்கு Unofficial military group (அதிகாரப்பூர்வமற்ற சிறிய படைக்குழு) என்று பெயர்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in