கொஞ்சம் technique கொஞ்சம் English - 269: இரவில் வந்த மாவீரன்!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 269: இரவில் வந்த மாவீரன்!

Published on

உமையாள்: இந்த நிலா எப்படி இருக்குது?

இசை: செமையா இருக்குது உமையாள்

மித்ரன்: ரொம்ப அழகா வரைஞ்சிருக்கீங்க அக்கா

இனியன்: Night ல வரக்கூடிய முழு நிலா எப்பவுமே அழகா இருக்கும்.

பாட்டி: நட்சத்திரங்களும் அழகாகவே இருக்கும்.

மித்ரன்: பூக்கள் சிதறி கிடக்குற மாதிரி நட்சத்திரங்கள் சிதறி கிடக்கும்.

இசை: மொட்டை மாடியில் படுத்துகிட்டே வேடிக்கை பார்க்கும்போது ஜாலியா இருக்கும்.

உமையாள்: அந்த Night சமயத்துல பாட்டி ஒரு கதை சொல்வாங்க பாரு.

இனியன்: அப்படி ஒரு தூக்கம் அப்போ நமக்கு வரும்.

மித்ரன்: மாவீரன் கதை ஒன்னு அடிக்கடி சொல்வாங்க.

இசை: ஏழு கடல் ஏழு மலை கடந்து பல சாகசங்கள் அந்த மாவீரன் பண்ணுவான்.

பாட்டி: மாவீரனை knight ன்னு சொல்வாங்க தெரியுமா?

இனியன்: Knight is coming at night.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in