

இசை: மித்ரன், காலையில கடைத்தெருவில் உன்னை பார்த்தேன்.
மித்ரன்: ஒரு பெரிய பை வச்சிருந்திருப்பேனே?
இனியன்: ஆமாம். அதையும் பார்த்தோம்.
மித்ரன்: நானும் அப்பாவும், இட்லி மாவு வாங்கிட்டு இருந்தோம்.
இசை: எதுக்கு அவ்வளவு மாவு.
மித்ரன்: காலையில், அத்தையும் மாமாவும் வந்து surprise கொடுத்துட்டாங்க. அதான் அவசரமா மாவு வாங்கி இட்லி அவிச்சோம்.
மித்ரன்: இந்தாங்க எல்லாரும் flowers எடுத்துக்கோங்க.
உமையாள்: Wow. எவ்வளவு flowers!
இசை: அத்தனையும் Rose Flowers!
இனியன்: Different colours ல இருக்குது.
மித்ரன்: நமக்காக தான் வாங்கிட்டு வந்திருக்காங்க.
இனியன்: Happy happy!
பாட்டி: “மாவு” என்பதற்கு ஆங்கில வார்த்தை என்னென்னு யாருக்காவது தெரியுமா?
உமையாள்: தெரியும் பாட்டி. Flour.
பாட்டி: “பூ”, “மாவு” இந்த இரண்டுக்குமே ஒரே pronunciation தான். ஃப்ளார்
இனியன்: ஓஹோ, அதனால தான் பூ போல இட்லின்னு சொல்லுறாங்களா!
இசை: அடேய்..அது வேற இது வேற
இனியன்: கிகிகிகிகி
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்