

இசை: அங்க பாரு மித்ரன் நிறைய பட்டத்துடன் வந்துட்டு இருக்கிறான்.
மித்ரன்: எல்லாரும் வாங்க. ஆளுக்கொரு பட்டம் எடுத்துக்கோங்க.
உமையாள்: என்ன விசேஷம். இவ்வளவு பட்டம் கொண்டு வந்திருக்கிற?
மித்ரன்: எங்க மாமா பெங்களூர்ல இருந்து வந்தாங்க.
இசை: ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான design ல இருக்குது பாரேன்.
பாட்டி: நாம இங்க பொங்கல் வாரம் கொண்டாடுறோம்ல. அதே மாதிரி அந்த வாரத்துல அவங்க அங்க பட்டம் விட்டு விளையாடுவாங்க.
உமையாள்: இந்த வருடம் நமக்கும் பட்டம் கிடைச்சிருக்கு. நாமும் இதை வச்சு காணும் பொங்கல் அன்னைக்கு விளையாடுவோம்.
இசை: சரி. இப்போவே பட்டத்தை ready பண்ணி வச்சிடுவோம்.
பாட்டி: நாட்டை (knot) நல்ல இறுக்கி போடுங்க. அப்போ தான் காத்துல அது அவிழ்ந்திடாம இருக்கும்.
இசை: இனியா, இந்த பட்டத்துல நாட் சரியா இல்லை (not) பாரேன்.
உமையாள்: ஐ. இது செமையா இருக்கே. This kite is not having proper knot.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்