கொஞ்சம் technique கொஞ்சம் English: 264: கதை எழுத தொடங்கியாச்சா!

கொஞ்சம் technique கொஞ்சம் English: 264: கதை எழுத தொடங்கியாச்சா!
Updated on
1 min read

இசை: இன்றைக்கு என்ன கதை?

மித்ரன்: என்னது கதையா?

இசை: ஆமாம். தினமும் ஒரு நாலு வரியாவது English ல கதை எழுதிட்டு இருக்கிறான்.

உமையாள்: அப்படியா இனியன். எங்கே காட்டு பார்க்கலாம்.

மித்ரன்: ஆரம்பமே அட்டகாசமா இருக்குதே.

இனியன்: இந்த கதையில், English mistakes இருந்தால் சொல்லுங்க. நான் திருத்திக்கிறேன்.

பாட்டி: Very good. தப்பை சரி செய்யுறேன்னு சொல்லுறது ரொம்ப நல்ல பழக்கம்.

உமையாள்: வாங்க எல்லாருமே இந்த கதையை வாசிச்சு பார்ப்போம்.

பாட்டி: இந்த வரியை கொஞ்சம் பாரேன். I opened my stationary box and took a pencil. இதில் நீ என்ன சொல்ல வர்ற?

இனியன்: என்னுடைய ஸ்டேஷனரி பாக்ஸ்ல இருந்து ஒரு பென்சில் எடுத்தேன்னு சொல்லியிருக்கேன்.

பாட்டி: ஆனால், நீ போட்டுருக்குற இந்த stationaryக்கு நிலையான என்று அர்த்தம். நிலையான பெட்டியில் இருந்து பென்சிலை எடுத்தேன் என்ற அர்த்தத்தில் எழுதியிருக்கிறாய்.

இனியன்: அப்படியா? ஆனால் ஸ்டேஷனரி என்பது ஸ்கேல் பென்சில் போன்ற பொருட்களை தானே குறிக்கும்.

பாட்டி: No worries. அதற்கு நீ stationery ன்னு எழுதணும்.

இனியன்: Ah!

பாட்டி: இப்போ சொல்லுங்க எல்லாரும். ஒரு எழுத்து மாறினால் என்ன ஆகும்?

All Children: அர்த்தமே மாறிடும்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in