

இனியன்: அதோ ஒரு சைட் (site) இருக்குது பாரு. அங்கே போய் விளையாடலாமா.
மித்ரன்: அந்த இடத்தை தானே site ன்னு சொல்லுற.
இனியன்: ஆமாம். அந்த சைட் (site) ல இருக்குற பூக்களை பாரேன். கண்கொள்ளா காட்சியா இருக்குது.
மித்ரன்: காட்சியையும் சைட் (sight) ன்னு தானே சொல்வோம்.
உமையாள்: Exactly.
பாட்டி: இதே போல இன்னொரு சைட் (cite) இருக்குது.
உமையாள்: தகவல்களை மேற்கோள் (cite) காட்ட இந்த வார்த்தையை பயன்படுத்துவோம்.
இசை: புத்தகத்தில் இருந்து, சில important points ஐ எடுத்து சொல்லுவோமே, அது போலவா?
பாட்டி: அதேதான்.
மித்ரன்: அட, மூன்றுக்கும் உச்சரிப்பு ஒன்று. Spelling வேறு.
இனியன்: அர்த்தமும் வேறு.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்.