கொஞ்சம் technique கொஞ்சம் English 260: யார் வருகிறார்?

கொஞ்சம் technique கொஞ்சம் English 260: யார் வருகிறார்?
Updated on
1 min read

இனியன்: பாட்டி எனக்கு who, whom என்ற இரண்டு question words-ம் அடிக்கடி confusion ஐ கொடுக்குது.

மித்ரன்: எனக்கும் தான்.

பாட்டி: ரொம்ப easy. இந்த இரண்டிற்கும் meaning என்ன என்று முதலில் சொல்லுங்க

உமையாள்: Who என்றால் யார்.

இசை: Whom என்றால் யாருக்கு.

பாட்டி: Who is coming with you? யார் உன்னுடன் வருகிறார்?

He is coming with me. அவர் என்னுடன் வருகிறார்.

பாட்டி: இதில் He என்பது என்ன?

மித்ரன்: He என்பது subject.

பாட்டி: ஒரு வாக்கியத்தின் subject ஐ குறித்து பேசப்போகிறோம் என்றால் "who" என்பதைப் பயன்படுத்த வேண்டும்.

பாட்டி: Whom are you calling? நீங்கள் யாரை அழைக்கிறீர்கள்?

I am calling him. நான் அவரை அழைக்கிறேன்.

பாட்டி: இதில் Him என்பது என்ன?

இனியன்: இதில் Him என்பது object pronoun.

பாட்டி: இது Verb உடன் இணைந்து வருகிறது. இதே போல preposition உடனும் இணைந்து வரும்.

இனியன்: இந்த சமயத்தில் கேட்கக் கூடிய கேள்விக்கு whom ஐ பயன்படுத்த வேண்டும்.

பாட்டி: Very good.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in