கொஞ்சம் technique கொஞ்சம் English 259: உயர்வோம்! உயர்த்துவோம்!

கொஞ்சம் technique கொஞ்சம் English 259: உயர்வோம்! உயர்த்துவோம்!
Updated on
1 min read

மித்ரன்: என்ன இனியா, கையை தூக்கி வச்சிட்டு இருக்குற?

இனியன்: அந்த Bat ஐ எடுக்க முயற்சி பண்ணுறேன்.

இசை: நேற்றெல்லாம் நல்ல மழை.

உமையாள்: ஏரியோட நீர்மட்டம் அதனால் உயர்ந்து இருக்குது.

இனியன்: சீக்கிரம் மழை விட்டால் நல்லா இருக்கும். வெளியே போய் விளையாடி ரெண்டு வாரம் ஆகுது.

பாட்டி: நான் ஒரு கேள்வி கேட்குறேன். கையை தூக்குறதுக்கும், நீர் மட்டம் உயருவதற்கும் ஒரு தொடர்பு இருக்குது. அது என்ன?

மித்ரன்: தெரியலையே பாட்டி.

பாட்டி: இரண்டுமே ஒரே உச்சரிப்பு மற்றும் ஒரே அர்த்தம் கொண்ட இரு வேறு வார்த்தைகள்.

இனியன்: எந்த இடத்தில் எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் பாட்டி?

பாட்டி: Direct object ஒன்று இருந்தால் அங்கு raise வரும்.

இசை: He is raising his hand.

பாட்டி: மேல்நோக்கிய இயக்கம் அல்லது ஏறுதலைக் குறிக்க Rise பயன்படுகிறது.

உமையாள்: Lake water is rising.

பாட்டி: சூரியனின் இயக்கம், வெப்பநிலை அல்லது உயரத்தைக் குறிக்க இதை பயன்படுத்த வேண்டும்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in