கொஞ்சம் technique கொஞ்சம் English 257: விரைவில் அமைதி திரும்பட்டும்

கொஞ்சம் technique கொஞ்சம் English 257: விரைவில் அமைதி திரும்பட்டும்
Updated on
1 min read

இசை: என்னடா, மிக்ஜாம் புயல் செய்திகளையே திரும்ப திரும்ப பார்த்துட்டு இருக்குற?

மித்ரன்: எங்க பெரியம்மா இருக்கக் கூடிய தெருவில் இன்னும் தண்ணீர் குறையலைன்னு சொன்னாங்க.

உமையாள்: தண்ணீர் வடிந்தால் மட்டுமே அவங்களுக்கு நிம்மதி.

இனியன்: நாய், பூனை போன்ற பிராணிகள் எல்லாம் நடுங்கிட்டு இருக்குற videos பார்த்தேன்.

இசை: ஒரு துண்டு பிஸ்கட் கூட இந்த பிராணிகளுக்கு கிடைக்க வழி இல்லாமல் இருந்திருக்கும்.

உமையாள்: நிலைமை சீக்கிரம் சரி ஆகும்னு நம்புவோம்.

பாட்டி: ஒரே pronunciation உள்ள இரண்டு வார்த்தைகள் இப்போது நீங்க பயன்படுத்துனீங்க.

இசை: ஆமாம் பாட்டி. ஒன்று Peace (சமாதானம்) , மற்றொன்று Piece (சிறு துண்டு)

மித்ரன்: They will have peace when the water drains. தண்ணீர் வடிந்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

உமையாள்: The dog is eating a piece of biscuit. நாய் பிஸ்கட் துண்டை சாப்பிடுகிறது.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in