கொஞ்சம் technique கொஞ்சம் English 253: Confusing words - அருகில் இருக்குமா?

கொஞ்சம் technique கொஞ்சம் English 253: Confusing words - அருகில் இருக்குமா?
Updated on
1 min read

பாட்டி: Beside என்ற வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கீங்களா?

உமையாள்: ஆமாம் பாட்டி. இதற்கு "பக்கத்தில்” என்று அர்த்தம்.

மித்ரன்: I want to sit beside you. (நான் உங்கள் பக்கத்தில் உட்கார விரும்புகிறேன்.)

பாட்டி: Great. இதேபோல Besides என்ற வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கீங்களா?

மித்ரன்: Beside க்கு plural ஆ?

பாட்டி: Beside என்பது preposition. அதற்கு plural கிடையாது.

இனியன்: Verb உடன் s சேர்த்து எழுதுவோமே, அது போலவான்னு கேட்க வந்தேன். Prepositionன்னு சொல்லிட்டீங்க.

பாட்டி: Besideக்கும் Besidesக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டும் வேறு வேறு வார்த்தைகள்.

இசை: அப்படியா?

பாட்டி: Besides என்றால் “தவிர” அல்லது “மட்டுமல்லாமல்” என்று அர்த்தம்.

உமையாள்: ok பாட்டி.

பாட்டி: Besides a pen, I have a pencil. (ஒரு பேனாவைத் தவிர, என்னிடம் ஒரு பென்சில் உள்ளது.)

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in