

இசை: என்ன தம்பி, பாலைவனத்தை சாப்பிட்டு காலி செய்தாச்சா?
மித்ரன்: என்னக்கா சொல்லுறீங்க. பாலைவனத்தை யாராவது சாப்பிட முடியுமா?
உமையாள்: நீ அப்படித்தானே எழுதி வச்சிருக்கிற
இனியன்: அப்படின்னா டெஸெர்ட்ன்னு சொல்லக் கூடாதா?
இசை: இங்கே நீங்க எழுதியிருக்கிற டெஸெர்ட்க்கு பாலைவனம் என்று அர்த்தம்.
மித்ரன்: பாட்டி, எனக்கு கொஞ்சம் இதை பத்தி விளக்கி சொல்லுறீங்களா?
பாட்டி: Dessert, desert இரண்டுமே ஒரே உச்சரிப்பு தான்.
உமையாள்: இரண்டு s வரும்போது அது இனிப்பை குறிக்கும். Dessert (இனிப்பு)
பாட்டி: ஒரு பெரிய உணவை சாப்பிட்ட பிறகு, சாப்பிடக்கூடிய இனிப்பிற்கு dessert என்று பெயர்
இசை: ஒரு s வரும் போது அது பாலைவனத்தைக் குறிக்கும். Desert (பாலைவனம்)
பாட்டி: வறண்ட பூமியை, காய்ந்து போன நிலத்தை, தாவரங்கள் வளர இயலாத பகுதியை பாலைவனம் என்று சொல்வோம்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்