

இனியன்: இந்த advertisement ஐ பாருங்க. Buy க்கு பதில் by ன்னு போட்டுருக்காங்க.
இசை: நானும் சில இடங்களில் இப்படி மாத்தி எழுதியிருந்ததை பார்த்திருக்கிறேன்.
இனியன்: அவ்வளவு பெரிய banner வைக்கிறாங்க. கொஞ்சம் பார்த்து எழுதக்கூடாதா என்ன!
உமையாள்: இப்படியே எழுதிட்டு இருந்தால், bye சொல்லிட்டு customer போய்டுவாங்க.
பாட்டி: அடடா என்ன ஒரு rhyming! இந்த வார்த்தைகளை எப்படி பயன்படுத்தணும்னு நீங்க சொல்லுங்க.
இனியன்: Buy என்றால் “விலைக்கு வாங்கு” என்று அர்த்தம்.
உமையாள்: By என்றால் “மூலமாக” என்று அர்த்தம்.
மித்ரன்: Bye என்றால் “விடைபெறுகிறேன்” என்று அர்த்தம்.
இசை: Bye என்பது Goodbye என்ற phrase ன் சுருக்கமாகும்.
இனியன்: Buy என்பது verb.
உமையாள்: By என்பது preposition.
பாட்டி: ரொம்ப அழகா எல்லாரும் சொன்னீங்க. Very good.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்