

இனியன்: ஒரே ஒரு எழுத்து தான் மாறியிருக்குது. அதுக்கு போய் ஒரு mark குறைச்சிட்டாங்களே..
இசை: அப்படியா? அது என்ன?
இனியன்: அந்த இடத்தில் e போடணும். ஆனால் a போட்டிருந்தேன்.
உமையாள்: என்ன வார்த்தைனு முதலில் சொல்லு.
இனியன்: Then ன்னு எழுதுறதுக்கு பதிலா Than ன்னு எழுதிட்டேன்.
பாட்டி: Wow. எவ்வளவு கூர்மையா பேப்பரை சரி பார்த்திருக்காங்க பாரேன்.
இனியன்: எங்க mam ரொம்ப sharp. ஏதாவது சின்ன mistake இருந்தாலும் கண்டுபிடிச்சிடுவாங்க.
உமையாள்: அப்போ உங்க mam பண்ணினது சரி தானே.
மித்ரன்: மிகவும் சரி. எனக்கும் இந்த குழப்பம் இருக்குது.
பாட்டி: Then என்றால் "பிறகு" என்று அர்த்தம். ஒன்றுக்கு பின்னால் மற்றொன்றன்று வரும் போது then ஐ பயன்படுத்தலாம்.
இசை: I will go to library and then read the book. நான் நூலகத்திற்குச் சென்று, பிறகு புத்தகத்தைப் படிப்பேன்.
பாட்டி: Than என்பது “விட” என்ற அர்த்தத்தை கொடுக்கும். Comparison செய்யும் போது இதை பயன்படுத்தலாம்.
உமையாள்: ஆற்று தண்ணீரை விட கடல் தண்ணீர் உப்பாக இருக்கிறது. Sea water is saltier than river water.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்