

இனியன்: இப்ப நான் சொல்ல போறது ரொம்ப easy words தான். ஆனாலும் நிறைய பேர் எங்க class ல மாத்தி எழுதி திட்டு வாங்குவாங்க..
உமையாள்: அது என்ன words?
இனியன்: To and Too
பாட்டி: இப்போது, இதில் நமக்கு என்ன தெரியுதுன்னு பார்க்கலாமா?
மித்ரன்: சரி பாட்டி. To என்பது preposition.
இசை: Verb அல்லது noun ற்கு முன்னால் இது வரும்.
உமையாள்: I will come to your place. நான் உங்கள் இடத்திற்கு வருகிறேன்.
மித்ரன்: I want to come there. நான் அங்கு வர விரும்புகிறேன்.
இனியன்: To ற்கு பிறகு வருகிற verb, present form இல் இருக்கும்.
உமையாள்: வழக்கத்திற்கு மீறி அதிகமாக ஒன்று நடக்கும் போது too என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம்.
இசை: Coffee is too hot. காபி மிகவும் சூடாக இருக்கிறது.
பாட்டி: இதே போல் இன்னொன்றும் இருக்கிறது. அது two.
மித்ரன்: இது இரண்டு என்ற எண்ணிக்கையை குறிக்கும்.
இனியன்: I have two books. என்னிடம் இரண்டு புத்தகங்கள் இருக்கின்றன.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்