

மித்ரன்: நேற்று பார்த்தது போல, நானும் சில வார்த்தைகள் எழுதும் போது மாத்தி எழுதிடுறேன்.
இசை: என்ன வார்த்தைகள் அது?
மித்ரன்: Your and You’re.
இனியன்: Same to you. தப்பா எழுதக்கூடாதுன்னு நினைச்சே தப்பா எழுதிடுறேன்.
உமையாள்: இதை எப்படி ஞாபகம் வச்சுக்கிறதுன்னு சொல்லிகுடுங்க பாட்டி.
பாட்டி:
Your என்பது உரிமையை / உடமையை (ownership) குறிக்கும் சொல். இது ஒரு Possessive Pronoun.
Eg: Your shirt (உன்னுடைய சட்டை), Your pen (உங்களுடைய பேனா), Your child உங்களுடைய குழந்தை.
You’re என்பது You are (நீங்கள்) ன் சுருக்கமாகும்.
Eg: You are looking great today. (நீங்கள் இன்று அழகாக இருக்கிறீர்கள்.)
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்