கொஞ்சம் technique கொஞ்சம் English 241: Confusing words - ஒரே குழப்பமா இருக்குதே!

கொஞ்சம் technique கொஞ்சம் English 241: Confusing words - ஒரே குழப்பமா இருக்குதே!
Updated on
1 min read

இனியன்: I will go their tomorrow.

இசை: என்னடா, notebook ல இப்படி எழுதி வச்சிருக்கிற. இந்த இடத்துல their ன்னு எழுதக் கூடாது. There தான் வரும்.

இனியன்: சில வார்த்தைகள் ஒரே மாதிரி pronounce பண்ணுறோமா, எழுதும் போது தப்பு பண்ணிடுறேன்.

மித்ரன்: எனக்கும் இந்த பிரச்சினை இருக்குது.

உமையாள்: “Their, There, They’re” இந்த மூன்றுமே உச்சரிக்கும் போது கிட்டத்தட்ட ஒரே மாதிரி தெரியும்.

மித்ரன்: இதை எப்படி பயன்படுத்தனும்னு எங்களுக்கு சொல்லிக்கொடுங்க பாட்டி.

பாட்டி: Their (அவர்களுடைய) என்பது possessive pronoun . இது ஒரு உரிமையை காட்ட பயன்படுகிறது.

உமையாள்: அவர்களுடைய வீடு (their house), அவர்களுடைய குழந்தை (their child), அவர்களுடைய தோட்டம் (their garden) இதற்கு example ஆக சொல்லலாம்.

பாட்டி: There (அங்கே) என்பது இடத்தை குறிக்கும் ஒரு சொல்.

இசை: Park is there. (பூங்கா அங்கே இருக்கிறது.) Children are playing there. (குழந்தைகள் அங்கே விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.)

பாட்டி: They’re என்பது They are (அவர்கள்) ன் சுருக்கமாகும்.

உமையாள்: They are reading. (அவர்கள் வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.)

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in