கொஞ்சம் technique கொஞ்சம் English 236: Prepositional Phrase - எங்கே விழுந்தது?

கொஞ்சம் technique கொஞ்சம் English 236: Prepositional Phrase - எங்கே விழுந்தது?
Updated on
1 min read

மித்ரன்: என்ன தேடிட்டு இருக்குற?

இனியன்: கோடு போடுறதுக்காக இந்த பென்சிலை எடுத்தேன். அப்போ கை பட்டு பக்கத்துல இருந்த Eraser கீழே விழுந்துடுச்சு. அதான் எங்க விழுந்ததுன்னு தேடிட்டு இருக்கிறேன்.

மித்ரன்: அந்த table க்கு அடியில இருக்குது பாரு.

இனியன்: அட ஆமாம். உருண்டு உருண்டு போய்டுச்சு போல.

பாட்டி: இப்போ நீ சொன்னது கூட ஒரு phrase தான் தெரியுமா?

மித்ரன்: அப்படியா? நான் என்ன சொன்னேன். அதுல எது phrase? கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன் பாட்டி.

பாட்டி: Eraser உருண்டு போய் எங்கே கிடந்தது?

இசை: Table க்கு அடியில் இருந்தது பாட்டி.

பாட்டி: Eraser was under the table. சரியா? இதில் under என்பது என்ன?

உமையாள்: Preposition பாட்டி.

இசை: Preposition மூலமாக இடம் (location), காலம் (time), வழி (direction), தொடர்பு (relationships between things) ஐ நம்மால் விளக்க முடியும்.

பாட்டி: Correct. இங்கு Preposition உடன் இணைந்து அதற்கு பின்னர் வரும் வார்த்தைகளுக்கு prepositional phrase என்று பெயர்.

உமையாள்: அப்படியென்றால், Under the table என்பது prepositional phrase.

பாட்டி: Excellent!

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in