

இனியன்: வா மித்ரன். நேத்து ரொம்ப வேகமா வீட்டுக்கு ஓடிப்போனேல்ல...எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா.
மித்ரன்: ஊர்ல இருந்து மாமா சாயந்திரம் வருவாங்கன்னு அம்மா சொல்லியிருந்தாங்க. மணி அடிச்சதும் மாமா ஞாபகம் வந்துடுச்சு. அதான் வேகமா வீட்டுக்கு ஓடிப் போனேன்.
பாட்டி: எவ்வாறு ஓடிப்போனாய் மித்ரன்?
மித்ரன்: வேகமாக பாட்டி
இசை: வேகமாக என்பது adverb தானே.
உமையாள்: Verb ஐ பற்றி விளக்கி சொல்லும் வார்த்தைக்கு பெயர் adverb.
பாட்டி: Correct. இந்த adverb ஆனது phraseஆக வந்தால் எப்படி இருக்கும்?
மித்ரன்: Adverb ம் phrase ஆக இருக்க முடியுமா என்ன?
பாட்டி: முடியுமே. அதற்கு பெயர் தான் Adverb Phrase.
இனியன்: அப்படின்னா, Adjective Phrase ஆனது noun ஐ விளக்கிச் சொன்னது போல, Adverb Phrase ஆனது verb ஐ விவரித்து சொல்லுமா?
பாட்டி: Yes. இந்த tableஐ பாருங்க. இதில் ஒவ்வொரு வாக்கியத்தில் உள்ள verbஐ, அதில் உள்ள Adverb Phrase மூலமாக விளக்கிச் சொல்கிறோம்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்