

பாட்டி: உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கிறேன். உங்களுக்கு தெரியுதா ன்னு பார்ப்போம்
உமையாள்: கேளுங்க பாட்டி.
பாட்டி: Phrase என்றால் என்ன?
இனியன்: Phrase என்பது சொற்களின் தொகுப்பு.
மித்ரன்: அதில் subject, verb என்று எதுவும் கிடையாது.
பாட்டி: Adjective என்றால் என்ன?
உமையாள்: Adjective என்பது noun அல்லது pronoun ஐ விளக்கப் பயன்படும் வார்த்தை.
இசை: இதன் மூலமாக noun அல்லது pronoun பற்றிய கூடுதல் விவரம் நமக்கு கிடைக்கும்.
பாட்டி: சரி. Adjective phrase என்றால் என்ன? நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்.
இசை: Noun அல்லது pronoun ஐ பற்றிய கூடுதல் விவரங்களை phrase பயன்படுத்தி சொல்லலாம்னு நினைக்கிறேன்
பாட்டி: Exactly. Adjective ஆனது ஒரு phrase ஆக வரும். அதற்கு பெயர் Adjective Phrase தான்
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்