

இனியன்: உன் கையில என்ன வச்சுருக்குற. கொஞ்சம் காட்டு.
இசை: ரொம்ப அழகா இருக்குதுல்ல.
உமையாள்: செம
பாட்டி: எல்லாரும் என்ன பாத்துட்டு இருக்கீங்க
மித்ரன்: என்கிட்ட ஒரு அழகான பந்து இருக்குது பாட்டி.
இனியன்: இந்த பந்து ஒரு ஒளிரும் பந்து பாட்டி.
மித்ரன்: இப்படி அழுத்தும் போது light வருதா?
பாட்டி: அட ஆமாம். நல்லா இருக்குதே.
உமையாள்: அழகான பந்து, ஒளிரும் பந்து இந்த வார்த்தைகளும் ரொம்ப நல்லா இருக்குது.
இனியன்: It is a beautiful ball.
மித்ரன்: It is a glowing ball.
உமையாள்: Beautiful ball, Glowing ball இப்படி சொல்லுறதுக்கு பேர் தானே adjective.
இசை: Noun ஐ adjective மூலமாக நம்மால் describe பண்ண முடியும்.
பாட்டி: இதை இன்னும் விளக்கமாக ஒரே வரியில் சொல்ல முடியும்.
மித்ரன்: எப்படி?
பாட்டி: It is a beautiful glowing ball. இப்படி விவரித்து சொல்வதற்கு பெயர் Phrase.
இனியன்: phrase ஆ?
பாட்டி:
Phrase என்பது சொற்களின் தொகுப்பு.
இதற்கு subject, verb என்று எதுவும் கிடையாது.
வாக்கியத்தில், குறிப்பிட்ட ஒரு வார்த்தையை விவரித்து சொல்ல phrase பயன்படுகிறது.
பாட்டி: Noun Phrase என்றால் என்ன தெரியுமா?
இசை: மேல பார்த்தது தானே. Beautiful glowing ball.
பாட்டி: Very good. வாக்கியத்தில் உள்ள noun ஐ விவரித்து சொல்லக்கூடிய phrase ற்கு பெயர் Noun Phrase
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்