

பாட்டி: Independent Clause என்றால் அர்த்தமுள்ள முழு வாக்கியம் என்று நேற்று பார்த்தோம்.
மித்ரன்: பாட்டி, எல்லா வாக்கியமும் அர்த்தமுள்ள முழு வாக்கியம் தானே.
இசை: அப்புறம் எதற்கு Independent Clause ஐ அர்த்தமுள்ள முழு வாக்கியம் என்று சொல்லுறோம்?
இனியன்: அர்த்தமில்லாத வாக்கியம் என்று எதாவது இருக்குதா என்ன?
பாட்டி: அருமையான கேள்வி. நீ சொல்வது சரி தான். அர்த்தமில்லாத வாக்கியம் என்று எதுவும் இல்லை. Conjunction ஞாபகம் இருக்குதா?
உமையாள்: நல்லாவே ஞாபகம் இருக்குது பாட்டி.
இசை: ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு வாக்கியங்களை இணைக்க Conjunction பயன்படுகிறது.
பாட்டி: இதில் ஒரு வாக்கியம் முழு அர்த்தத்தை கொடுக்கும். மற்றொரு வாக்கியம் “என்ன காரணத்திற்காக” என்ற விளக்கத்தை கொடுக்கும். சரியா?
“என்ன காரணத்திற்காக” என்பது “முழுமையடையாத வாக்கியமாக” இருக்கும்.
இனியன்: Example ஒன்று சொல்லுங்க பாட்டி.
பாட்டி:
I will buy two tickets if you come. (நீ வந்தால், நான் இரண்டு நுழைவுசீட்டு வாங்குவேன்.)
இதில், Conjunction ற்கு பிறகு வரக் கூடியது (if you come) முழுமையடையாத வாக்கியம். இதை தனித்து கூறும் போது, அர்த்தம் எதுவும் நமக்கு புலப்படாது.
இந்த வாக்கியம், மற்றுமொரு வாக்கியத்தை சார்ந்து வருகிறது. அதன் மூலம் நமக்கு ஒரு முழுமையான விளக்கம் கிடைக்கிறது. இதை Dependent Clause என்று சொல்லலாம்.
மித்ரன்:
Now I got it.
# Dependent Clause ஆனது Conjunction ற்கு பிறகு வரும். இந்த Clause மற்றுமொரு வாக்கியத்தை சார்ந்து வரும். தனியாக பார்க்கும் பொழுது, இதற்கு முழுமையான அர்த்தம் இருக்காது.
# Independent Clause ஆனது ஒற்றை வாக்கியமாக இருக்கும். முழு அர்த்தத்தை கொண்டதாக இருக்கும். இங்கு Conjunction கிடையாது.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்