கொஞ்சம் technique கொஞ்சம் English - 230: Clause - ஓர் அறிமுகம்

கொஞ்சம் technique கொஞ்சம் English - 230: Clause - ஓர் அறிமுகம்
Updated on
2 min read

மித்ரன்: ஒரு வாக்கியம் சரியா இருக்குதா இல்லையா ன்னு எப்படி கண்டுபிடிப்பது?

உமையாள்: வாக்கியத்தில் subject இருக்கணும்.

இசை: அதில் ஒரு verb ம் இருக்கணும்.

இனியன்: அப்புறம் object, noun, pronoun எல்லாம் இருக்க வாய்ப்பு இருக்குது.

இசை: Adverb இருக்கலாம்.

உமையாள்: Conjunction உம் வரலாம்.

இனியன்: இதற்கு பெயர் தான் வாக்கியம் அல்லது sentence.

பாட்டி: இதே போல இன்னொன்று இருக்குது. அதுக்கு பேர் Clause.

மித்ரன்: Clause ஆ! அப்படின்னா என்ன?

பாட்டி: Clause என்பது subject மற்றும் verb ஆகியவற்றைக் கொண்ட சொற்களின் குழு.

இனியன்: இதைத்தானே sentence ன்னு சொல்வோம்.

பாட்டி: Clause ஆனது ஒரு sentence ஆகவோ அல்லது sentence இல் ஒரு பகுதியாகவோ இருக்க முடியும்.

இனியன்: Part of the sentence ஆகவும் இருக்குமா?

பாட்டி: ஆமாம். ஆனால் Part of the sentence ஆனது முழுமையான அர்த்தத்தை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இசை: பாதி sentence கூட full meaning ஐ கொடுக்கும் ன்னு சொல்லுறீங்களா?

பாட்டி: Correct

Clause இல் இரண்டு types உண்டு.

1. Independent Clause (அர்த்தமுள்ள முழுமையான வாக்கியம்.)

2. Dependent Clause (வாக்கியத்தின் ஒரு பகுதி)

Independent ClauseShe is studying for her final exams.அவள் இறுதித் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கிறாள்.The sun is shining brightly.சூரியன் பிரகாசமாக பிரகாசிக்கிறது.They went to the beach last weekend.கடந்த வார இறுதியில் கடற்கரைக்கு சென்றனர்.He loves to play the guitar.அவருக்கு கிட்டார் வாசிப்பது பிடிக்கும்.The cat sat on the windowsill.பூனை ஜன்னல் மீது அமர்ந்தது.We arrived at the party early.விருந்துக்கு சீக்கிரமே வந்துவிட்டோம்.The book is on the shelf.புத்தகம் அலமாரியில் உள்ளது.I have a meeting in the afternoon.எனக்கு மதியம் மீட்டிங் இருக்கு.The children are playing in the park.பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.She cooked dinner for the family.அவள் குடும்பத்திற்கு இரவு உணவை சமைத்தாள்.The car needs a new battery.காருக்கு புதிய பேட்டரி தேவை.I’ll meet you at the cafe.நான் உங்களை ஓட்டலில் சந்திப்பேன்.He painted the entire room.அறை முழுவதும் வண்ணம் தீட்டினார்.We watched a movie last night.நேற்று இரவு ஒரு திரைப்படம் பார்த்தோம்.The teacher explained the lesson.ஆசிரியர் பாடத்தை விளக்கினார்.They are going on a vacation.அவர்கள் விடுமுறைக்கு செல்கிறார்கள்.The flowers are in full bloom.பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.She runs every morning.அவள் தினமும் காலையில் ஓடுகிறாள்.The dog barks loudly.நாய் சத்தமாக குரைக்கிறது.I want to travel the world.நான் உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புகிறேன்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in