

பாட்டி: Infinitive மற்றும் gerund இரண்டிற்கும் தொடர்பு இருக்குது தெரியுமா?
உமையாள்: ஆனால் பாட்டி, Infinitive என்பது முடிவிலி வாக்கியம். Gerund என்பது பெயர்ச் சொல்லாக செயல்படக் கூடிய வினைச் சொல்.
இசை: இரண்டும் verb தானே...அந்த தொடர்பா?
உமையாள்: Infinitive யில் verbற்கு முன்னால் to வரும். Gerundஇல் verbற்கு பிறகு ing வரும்.
இனியன்: அதே தான் நானும் யோசிச்சேன்.
இசை: Infinitive இல் verb ற்கு முன்னால் வருகிற to ஐ நீக்கி விட்டு verb உடன் ing சேர்த்தால் Gerund வந்துவிடும். அவ்வளவு தான். சரியா?
உமையாள்: நீ மட்டும் ஏன் அமைதியா இருக்குற?
மித்ரன்: இது மட்டும் தானா இல்ல வேறு எதாவது இருக்குமா ன்னு யோசிக்கிறேன்.
பாட்டி: infinitive மற்றும் gerund ஆகியவை வினை வடிவங்கள் என்றாலும், சில சமயங்களில் வாக்கியங்களில் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படலாம்.
மித்ரன்: எப்படி பாட்டி?
பாட்டி:
# I like to swim. (Infinitive). இந்த வாக்கியம் நீச்சலைப் பற்றி பொதுவான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.
# I like swimming. (Gerund). இந்த வாக்கியமும் நீச்சலைப் பற்றி பொதுவான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.
# முதல் வாக்கியம் “எனக்கு நீந்த பிடிக்கும் (or) நான் நீந்த விரும்புகிறேன். (or) எனக்கு நீச்சல் பிடிக்கும்.
# இரண்டாவது வாக்கியம் “எனக்கு நீச்சல் பிடிக்கும்”
இசை: இந்த இரண்டிற்கும் ஒரே meaning உம் வருது. வேறு Meaning உம் இருக்குது.
பாட்டி: இந்த Example ஐ பாருங்க.
# He stopped to smoke. (Infinitive)
# He stopped smoking. (Gerund)
# முதல் வாக்கியம் “அவர் புகை பிடிப்பதற்காக நிறுத் தினார்”.
# இரண்டாவது வாக்கியம், “அவர் புகை பிடிப்பதை நிறுத் தினார்”.
# முதல் வாக்கியம் புகைபிடிப்பதற்காக அவர் வேறு ஏதோ செய்ததை இடைநிறுத்தியதாகக் கூறுகிறது.
# இரண்டாவது வாக்கியம் அவர் புகைபிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக விட்டுவிட்டார் என்று கூறுகிறது.
பாட்டி: இப்ப சொல்லுங்க. To ஐ நீக்கிவிட்டு ing ஐ verb உடன் சேர்த்தால் என்ன நடக்கிறது?
உமையாள்: இங்கே meaning மாறுதே!
பாட்டி: Correct. நீங்கள் எல்லோரும் சொன்னது போல infinitive மற்றும் gerund இரண்டும் verb ஐ பொறுத்தவை. ஆனால் …
இனியன்: வாக்கியத்தின் சூழல் மற்றும் நோக்கத்தைப் பொறுத்து இவை இரண்டும் பயன்படுத்தப்படுகின்றன.
பாட்டி: Correct. அர்த்தத்தில் மாற்றம் இல்லாமல், ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படலாம்.
உமையாள்: பெரிய அளவில் அர்த்தத்தில் மாற்றம் இல்லாமல் infinitive ஐயும் Gerund ஐயும் ஒன்றுக்கொன்று interchange செய்ய முடியும்னு நாங்க தெரிஞ்சிக்கிட்டோம்.
பாட்டி: ஒரே அர்த்தத்தை கொண்டிருக்கிற Infinitive மற்றும் Gerund ற்கு Examples இங்கு இருக்குது பாருங்க.
# I enjoy to read.
# I enjoy reading.
# He likes to play the guitar.
# He likes playing the guitar.
# They plan to go on a hiking trip this weekend.
# They plan on going on a hiking trip this weekend.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்