கொஞ்சம் technique கொஞ்சம் English - 228: Infinitive - ஒரு Recap செய்வோமா!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 228: Infinitive - ஒரு Recap செய்வோமா!
Updated on
1 min read

மித்ரன்: நான் இப்போதெல்லாம் தினமும் English story book வாசிக்கிறேன்.

இசை: செம மித்ரன்.

மித்ரன்: 2 pages கண்டிப்பாக வாசிக்கணும்னு முடிவு பண்ணி வாசிச்சிட்டு இருக்கிறேன்.

பாட்டி: Great! Reading books is a good habit.

மித்ரன்: நேத்து கதை ரொம்ப விறுவிறுப்பாக போச்சு. என்னை அறியாமல் இரண்டு பக்கம் extra வாசிச்சிட்டேன்.

இனியன்: ஐ. இது இன்னும் நல்லா இருக்கு.

பாட்டி: இன்று Infinitive ஐ recall செய்து பார்ப்போமா?

இனியன்: ஓ Infinitive முடிந்ததா!

பாட்டி: ஆமாம். அது போக ஒவ்வொரு lesson க்கும் recap ரொம்ப அவசியம். அப்போ தான் என்னெல்லாம் படித்திருக்கிறோம்னு நமக்கு தெரியும்.

இனியன்: to ற்கு பிறகு verb மட்டும்தான் வரும்னு இவ்வளவு நாள் நினைச்சு வைச்சிருந்தேன்.

உமையாள்: Infinitive sentence ஐ படித்ததற்கு பிறகு, எத்தனை விதமான முடிவிலி வாக்கிய முறைகள் இருக்குதுன்னு நானும் தெரிஞ்சிகிட்டேன்.

பாட்டி:

1. Infinitive என்பது ஒரு வினைச்சொல்லின் மிக அடிப் படையான வடிவமாகும்.

2. Infinitives பொதுவாக "to" என்ற முன்னுரையால் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சில வினைச்சொற்கள், "let," "make," மற்றும் "help" போன்றவற்றை "to" இல்லாமல் பின்பற்றலாம்.

3. Infinitiveற்கு tense கிடையாது. இது அனைத்து காலங் களிலும் பொருந்தக் கூடியதாகவே இருக்கும்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in