

மித்ரன்: Bare Infinitive பற்றி இன்னும் விளக்கமாக தெரிஞ்சுக்கணும்னு விரும்புறேன் பாட்டி.
இனியன்: எந்த சமயங்களில் இது வரும்னு சொல்லுறீங்களா?
பாட்டி: Sure. Modal verbs என்னெல்லாம் இருக்குதுன்னு சொல்லுங்க?
உமையாள்: can, could, will, would, shall, should, may, might, must.
பாட்டி: இந்த modal verbsற்கு பிறகு verbன் base form மட்டும் தான் வர வேண்டும். “to” இங்கு வரக் கூடாது.
பாட்டி: “let, allow, permit, make, force, require, get, have, help, and keep” இவற்றையெல்லாம் Causative verbs (காரண வினை) என்று சொல்வோம்.
இதற்கு பின்னாலும் “to” வராது. Verb ன் base form தான் வர வேண்டும்.
பாட்டி: “see,” “hear,” “watch,” “feel,” and “help” இவையெல்லாம் உணர்வு பற்றி எடுத்துச் சொல்லக்கூடிய வினைச்சொற்கள்.
குறிப்பாக உணரப்பட்ட அல்லது சாட்சியாக இருக்கும் செயலை விவரிக்கும் போது “to” வராது. Verb ன் base form மட்டும் வரும்.
பாட்டி: Imperative sentence ஞாபகம் இருக்குதா?
இசை: நல்லாவே ஞாபகம் இருக்குது பாட்டி. Command and request sentence.
பாட்டி: இங்கும் verbன் base form தான் வரும். Verbற்கு முன்னால் “to” வராது.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்