

பாட்டி: இன்று நாம் பார்க்கப் போகிற infinitive ற்கு பெயர் Bare Infinitive.
மித்ரன்: Bare Infinitive ஆ? Bare என்றால் “ஒன்றுமே இல்லாத” ன்னு தானே அர்த்தம்.
இனியன்: அப்போ எதுவுமே இல்லாமல் ஒரு infinitive ஆ?
உமையாள்: Wait. அந்த sentence ஆனது, infinitive போல பார்க்கும் போது தெரியாது. ஆனாலும் அது infinitive ஆ இருக்கும் அப்படின்னு நினைக்கிறன்.
இனியன்: குழப்பமா இருக்கே.
பாட்டி: உமையாள் சொன்னது சரி தான். அது ஒரு infinitive sentence. ஆனால், infinitive ற்கு பயன்படுத்தக் கூடிய பொதுவான வார்த்தை “to” அங்கு வராது.
இசை: “to” இல்லாமல் வரக் கூடிய infinitive sentence ற்கு Bare Infinitive என்று பெயர். Am I right?
பாட்டி: Correct. என்னால் நீந்த முடியும். இந்த வாக்கியத்திற்கு முற்று இருக்கிறதா?
இசை: இல்லை பாட்டி. எல்லா நாளுமே இது நடக்கும். Verb இல் எந்த மாற்றமும் வராது.
பாட்டி: அப்படியென்றால் இதை ஒரு infinitive என்று நாம் சொல்லலாமா?
இனியன்: சொல்லலாமே!
பாட்டி: ஆங்கிலத்தில் I can swim. இதில் “to”என்ற வார்த்தைக்கு அவசியம் இல்லை தானே?
மித்ரன்: தேவையே இல்லை.
இனியன்: இதற்கு formula இருக்குதா பாட்டி?
பாட்டி:
Formula:
Base form of the verb (without "to").
Example:
lBase form of the verb: to go à Bare infinitive: go
lBase form of the verb: to eat à Bare infinitive: eat
lBase form of the verb: to study à Bare infinitive: study
lBase form of the verb: to sing à Bare infinitive: sing
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்