Last Updated : 18 Oct, 2023 04:30 AM

 

Published : 18 Oct 2023 04:30 AM
Last Updated : 18 Oct 2023 04:30 AM

கொஞ்சம் technique கொஞ்சம் English - 224: Progressive Infinitive - தொடர்கிறது

உமையாள்: Progressive Infinitive ஐப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கணும் பாட்டி.

பாட்டி: கண்டிப்பா. உங்களுடைய கேள்விகளை சொல்லுங்க.

இசை: He appeared to be working diligently on his project.

மித்ரன்: இதில் past tenseம் வருது. Continuous tense இல் உள்ள ing verbம் வருது.

இனியன்: தமிழில் translate பண்ணும்போது, நீங்க “கொண்டு” ங்கிற வார்த்தையை போடவே இல்லையே!

பாட்டி: சரி. இதில் இரண்டு verb வருகிறது அல்லவா. ஒரே ஒரு verb ஐ மட்டும் வைத்து வாக்கியம் அமைத்துப் பார்ப்போம்.

இசை:

# He was working diligently on his project. அவர் தனது திட்டத்தில் விடாமுயற்சியுடன் பணியாற்றிக் கொண்டு இருந்தார்.

# He is working diligently on his project. அவர் தனது திட்டத்தில் விடாமுயற்சியுடன் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்.

# He will be working diligently on his project. அவர் தனது திட்டத்தில் விடாமுயற்சியுடன் பணியாற்றிக் கொண்டு இருப்பார்.

உமையாள்:

# He worked diligently on his project. அவர் தனது திட்டத்தில் விடாமுயற்சியுடன் பணியாற்றினார்.

# He works diligently on his project. அவர் தனது திட்டத்தில் விடாமுயற்சியுடன் பணியாற்றுகிறார்.

# He will work diligently on his project. அவர் தனது திட்டத்தில் விடாமுயற்சியுடன் பணியாற்றுவார்.

மித்ரன்:

# He was appearing diligently on his project. அவர் தனது திட்டத்தில் விடாமுயற்சியுடன் தோன்றிக் கொண்டு இருந்தார்.

# He is appearing diligently on his project. அவர் தனது திட்டத்தில் விடாமுயற்சியுடன் தோன்றிக் கொண்டு இருக்கிறார்.

# He will be appearing diligently on his project. அவர் தனது திட்டத்தில் விடாமுயற்சியுடன் தோன்றிக் கொண்டு இருப்பார்.

இனியன்:

# He appeared diligently on his project. அவர் தனது திட்டத்தில் விடாமுயற்சியுடன் தோன்றினார்.

# He appears diligently on his project. அவர் தனது திட்டத்தில் விடாமுயற்சியுடன் தோன்றுகிறார்.

# He will appear diligently on his project. அவர் தனது திட்டத்தில் விடாமுயற்சியுடன் தோன்றுவார்.

பாட்டி: இந்த வாக்கியங்களில் இருந்து, இப்போது ஒன்றை கண்டுபிடிக்கலாம?

மித்ரன்: சொல்லுங்க பாட்டி.

பாட்டி: “பணியாற்றுகிறது போல தோன்றிக்கொண்டு இருக்கிறார்.” என்றால் எப்படி சொல்லவேண்டும்?

# He appears to be working diligently on his project.

இனியன்: இதை பேச்சு வழக்கில், “அவர் வேலை செய்யுறது போலத் தெரியுது” அப்படின்னு தானே சொல்லுவோம்.

பாட்டி: Correct. Progressive infinitive வாக்கியத்திற்கும் present, past, future மூன்றும் இருக்கிறது.

# He appeared to be working diligently on his project. பணியாற்றுகிறது போல தோன்றிக்கொண்டு இருந்தார்.

# He will appear to be working diligently on his project. பணியாற்றுகிறது போல தோன்றிக்கொண்டு இருப்பார்.

பாட்டி: இங்கே ஒரு continuous action நடக்குதா?

மித்ரன்: ஆமாம் பாட்டி.

பாட்டி: He is coming என்பதை பேச்சு வழக்கில் எப்படி சொல்வோம்?

உமையாள்: “வந்து கொண்டு இருக்கிறார்” என்றும் சொல்லலாம். “வருகிறார்” என்றும் சொல்லலாம் பாட்டி.

பாட்டி: அதே தான் இங்கும். ஒரு வாக்கியத்தை புரிந்து கொள்ள சிரமம் இருக்கும் பட்சத்தில், “கொண்டு” வார்த்தையை சேர்த்து அதை இன்னும் தெளிவாக விளக்கலாம். எல்லா இடத்திலும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x