கொஞ்சம் technique கொஞ்சம் English - 225: Split Infinitive - பிரிக்கலாமா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 225: Split Infinitive - பிரிக்கலாமா?
Updated on
1 min read

உமையாள்: Infinitive யில் to ற்கு அடுத்து கண்டிப்பா verb தான் வரணும். சரி தானே பாட்டி?

பாட்டி: உண்மை தான். ஆனால் சில சமயங்களில் மற்ற வார்த்தைகளும் வரும்.

மித்ரன்: அது என்ன பாட்டி?

பாட்டி: Adverb ற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படக் கூடிய Infinitive வாக்கியங்கள் இருக்கின்றன. இங்கு to விற்கு அடுத்து adverb வரும்.

இசை: To ற்கு அடுத்து adverb ஆ? அதற்கு பெயர் infinitive ஆ? புரியலையே பாட்டி.

பாட்டி: To ற்கும் verb ற்கும் நடுவில் adverb வரும்.

இனியன்: ஓ, to ஐயும் verb ஐயும் இந்த adverb பிரிக்குதா?

பாட்டி: Correct. “to” வையும் “verb” ஐயும் இந்த adverb ஆனது split செய்வதால், இதை Split Infinitive என்று சொல்கிறோம்.

Formula:

to adverb base form of the verb

Example:

to quickly run

to carefully read

to fully understand

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in