

பாட்டி: Infinitive யிலும் நிறைய type இருக்குது.
இசை: அப்படியா பாட்டி.
பாட்டி: ஆங்கிலத்தில் பயன்படுத்தக் கூடிய பொதுவான வகை infinitive ஐ இன்று நாம் பார்க்கலாம். இதன் பெயர் Full Infinitive.
இனியன்: Ok பாட்டி.
பாட்டி: இந்த Full Infinitive வாக்கியத்தில் main verb ற்கு அடுத்து வருகிற verb ற்கு முன்னால் "to" என்ற வார்த்தையை இணைக்க வேண்டும்.
மித்ரன்: அப்போ, இரண்டு verb இங்கேயும் வருது.
பாட்டி: ஆமாம். முக்கியமாக Full Infinitive நோக்கத்தை வெளிப்படுத்தவே பயன்படும்.
உமையாள்: Intention என்னனு சொல்லுறதுக்கு Full Infinitive ஐ பயன்படுத்தலாம். சரியா?
பாட்டி: Correct. இது Adjective ற்கு பிறகு subject ஆகவோ அல்லது object ஆகவோ பொருள் படும்படி வரலாம்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்