கொஞ்சம் technique கொஞ்சம் English - 223: Infinitive - ஓர் அறிமுகம்

கொஞ்சம் technique கொஞ்சம் English - 223: Infinitive - ஓர் அறிமுகம்
Updated on
2 min read

இசை: Ongoing activities ஐ விளக்க Gerund பயன்படுகிறது என்று பார்த்தோம்.

உமையாள்: ஆமாம். “ing” ஐ வைத்து ஒரு வாரமா நல்ல விளையாடிட்டோம்.

பாட்டி: இதே போல interesting ஆன மற்றொரு வாக்கியம் இருக்கிறது.

இனியன்: அது என்ன பாட்டி?

பாட்டி: அதன் பெயர் முடிவிலி வாக்கியம்.

மித்ரன்: என்னது மூடிவிலியா?

உமையாள்: மூடிவிலி இல்லை தம்பி. அது முடிவிலி.

பாட்டி: முடிவிலி வாக்கியங்கள் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

இசை: முடிவிலிங்கிற பேரைப் பார்க்கும் போது, அந்த வாக்கியத்திற்கு முடிவு இல்லைன்னு தோணுது.

மித்ரன்: அப்படின்னா, அந்த வாக்கியத்திற்கு end ஏ கிடையாதா?

உமையாள்: அப்போ அந்த வாக்கியம் எப்போ முடியும்?

இனியன்: அந்த வாக்கியத்திற்கு full stop இல்லை தானே?

மித்ரன்: இது என்ன புது குழப்பமா இருக்குது.

பாட்டி: உனக்கு நீந்துவது பிடிக்கும் தானே.

உமையாள்: ஆமாம் பாட்டி.

பாட்டி: உனக்கு cycle ஓட்டுவது பிடிக்கும் தானே.

இசை: ரொம்ப பிடிக்கும் பாட்டி.

பாட்டி: உனக்கு சாப்பிடுறது பிடிக்கும் தானே?

மித்ரன்: சாப்பாடுன்னு பேரை சொன்னாலே எனக்கு சந்தோசம் தான். அதை கையில கொடுத்தா, கேட்கவா வேணும்.

இனியன்: ஏன் பாட்டி, இதெல்லாம் கேட்குறீங்க.

பாட்டி: இப்போ நான் சொன்னது எல்லாமே இப்போது மட்டும் தானே நடக்கும். நாளைக்கு இது மாறிவிடும் தானே.

உமையாள்: அது எப்படி பாட்டி. எனக்கு நீந்துவது இன்னைக்கும் பிடிக்கும். நாளைக்கும் பிடிக்கும். எப்பவுமே பிடிக்கும்.

இசை: அது போல தான் எனக்கும். எப்பவுமே எனக்கு cycle ஓட்டுறது பிடிக்கும்.

மித்ரன்: நானும் தான். எப்பவுமே நல்லா சாப்பிடுவேன். அது ஒரு நாள்ல முடியுற விஷயமா என்ன?

பாட்டி: இப்போது என்ன சொன்னாய். திருப்பி சொல்லு.

மித்ரன்: இதெல்லாம் ஒரு நாள் ல்ல முடியுற விஷயமா ன்னு சொன்னேன்.

பாட்டி: அதைத் தானே நானும் சொன்னேன்.

மித்ரன்: எப்போ சொன்னீங்க....

இசை: நான் கண்டுபிடிச்சிட்டேன். இந்த மாதிரியான வாக்கியங்களுக்குப் பெயர் தான் முடிவிலி.

பாட்டி: Correct. முடிவிலி வாக்கியத்தை ஆங்கிலத்தில் Infinitive Sentence என்று சொல்வோம்.

மித்ரன்: அப்படியா. சரி பாட்டி.

பாட்டி: இப்போது நாம் பார்த்த அனைத்து வாக்கியங்களும் வினைச்சொல்லை முதன்மைப்படுத்தி வந்ததா?

இனியன்: ஆமாம் பாட்டி. Swim, drive, eat இதெல்லாமே verb தான்.

பாட்டி: Infinitive sentence யில் இரண்டு verb வரும்.

இரண்டாவது verb ற்கு முன்னால் to சேர்க்க வேண்டும்.

“to” வை வினைச்சொல்லிற்கு முன்னால் சேர்த்து எழுதும் போது, அது முடிவிலி வாக்கியமாக மாறுகிறது.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in