கொஞ்சம் technique கொஞ்சம் English - 222: Gerund - ஒரு Recall செய்வோமா!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 222: Gerund - ஒரு Recall செய்வோமா!
Updated on
1 min read

மித்ரன்: “ing” வார்த்தைக்கு பிறகு இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா.. ரொம்ப ஆச்சரியமாக இருக்குதுல்ல!

இனியன்: ஆமாம். நானும் “be verbs” கூட தான் “ing”வார்த்தைகள் வந்து பார்த்திருக்கிறேன்.

பாட்டி: இப்போது ஒரு நல்ல clarity எல்லாருக்குமே வந்திருக்கும் ன்னு நம்புறேன்.

உமையாள்: Yes பாட்டி. நல்ல புரிஞ்சது. நிறைய practice தான் எங்களுக்கு இப்போது தேவைப்படுது.

பாட்டி: ஆங்கிலத்தில் நாம் நிறைய இலக்கண விதிகளை இதுவரை பார்த்திருக்கிறோம். ஆங்கிலப் புத்தகங்களை நீங்கள் படிக்க ஆரம்பிக்க சரியான நேரம் இது.

இனியன்: Sure பாட்டி. புத்தக வாசிப்பு எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் ன்னு நம்புறோம்.

இசை: நாம் பார்த்த அனைத்து gerund ஐயும் இன்று recall செய்து பார்ப்போமா?

மித்ரன்: நானும் அதைத்தான் நினைத்தேன்.

பாட்டி: கண்டிப்பாக. Recall செய்து பார்க்கும் போது, எல்லாருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.

1. Gerund என்பது “verb ing”

2. Gerund ஆனது பெயர்ச்சொல்லாக செயல்படும் வினைச்சொல்லின் ஒரு வடிவம்.

3. Gerund ஐ சூழ்நிலையை பொறுத்து வேறு வேறு இடத்தில் (subject, object, adjective, preposition) பயன்படுத்தலாம்.

4. எளிய வாக்கியத்தில் (simple sentence) தொடங்கி படிப்படியாக சிக்கலான வாக்கியங்களை (complex sentence) உருவாக்கிப் பார்க்கலாம்.

பாட்டி: Consistency உடன் சேர்ந்த practice இருக்கும் போது, நம்ம கைக்குள்ள gerund ஐ எளிதாக கொண்டு வர முடியும்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in