

உமையாள்: Linking verb பற்றி மேலும் தெரிஞ்சுக்க ஆர்வமாக இருக்கிறோம் பாட்டி.
பாட்டி: Sure. எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்.
இசை: நாங்கள் ஏற்கனவே “to be” category யில் வருகிற linking verb ஐ பார்த்து இருக்கிறோம்.
மித்ரன்: Gerund இல்லாமல் அந்த linking verb ஐ நாங்கள் பயன்படுத்தவும் செய்கிறோம்.
இசை:
I am a student.
You are a teacher.
He is a football player.
She will be a dancer.
We shall be great readers.
It was a toy.
இனியன்: இதெல்லாம் “to be” category யில் வருகிற linking verb ற்கு Example ஆக சொல்லலாம் தானே?
பாட்டி: You are right.
உமையாள்: “To be” category யில் வருகிற வார்த்தைகளைத் தவிர எந்த வார்த்தைகளெல்லாம் linking verb ஆக பயன்படுத்தலாம் என்று சொல்லுங்க.
பாட்டி: இதோ, இந்த table ஐ பாருங்கள். இதில் உள்ள வார்த்தைகளை யெல்லாம் linking verb ஆக பயன்படுத்த முடியும்.
இனியன்: சரி பாட்டி.
பாட்டி: Subject ற்கு அதிகப்படியான information ஐகொடுப்பதற்கு இந்த வார்த்தைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
மித்ரன்: subject ன் செயல், செயல்பாடு மற்றும் தரம் போன்றவைகள் linking verb மூலமாக வெளியே தெளிவாக தெரியும் என்று சொல்லுங்க.
பாட்டி: Exactly. இந்த வார்த்தைகளை வைத்து அமைத்த complement gerund வாக்கியங்களும் இங்கு இருக்கிறது. படித்துப் பாருங்கள்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்