

பாட்டி: இன்று நாம் பார்க்கப் போகிற Gerund ன் பெயர் Complement Gerund. இது linking verb உடன் இணைந்து வரும்.
மித்ரன்: Linking verb என்பது am, is, was, were, will be போன்ற வார்த்தைகள் தானே பாட்டி?
பாட்டி: ஆமாம்.
இனியன்: அப்படி என்றால், Continuous Tense மற்றும் Complement Gerund இரண்டும் ஒன்றா?
பாட்டி: இரண்டும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தது.
இசை: தொடர்ச்சியாக நடக்கிற/நடந்த/நடக்க இருக்கிற செயலை குறிக்கத் தானே continuous tenseஐ பயன்படுத்துவோம்.
பாட்டி: மிகவும் சரி. அது போக Continuous Tense இல் வருவதும் linking verb தான். இந்த linking verbs அனைத்தும் “to be” category க்கு கீழே வரும்.
இனியன்: ok பாட்டி.
பாட்டி: Complement Gerund என்பது பெயர்ச் சொல்லிற்காக(subject) "ing" இல் முடிவடையும் ஒரு வினை வடிவம் (verb).
இனியன்: அப்படியா?
பாட்டி: இது subject பற்றிய கூடுதல் தகவலை வழங்குவதன் மூலம் ஒரு வாக்கியத்தின் முழுமையான அர்த்தத்தை கொடுக்க உதவுகிறது.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்