

மித்ரன்: நேத்து subject gerundஐ பார்த்தோம். அப்படின்னா இன்னைக்கு object gerund ஆ?
இசை: அட rhyming ஆ பேசுறியே!
இனியன்: முதல்ல, object gerundன்னு ஒன்னு இருக்குதானு பாட்டி கிட்ட கேட்கலாம். நீங்க சொல்லுங்க பாட்டி.
பாட்டி: அவன் சொன்னது சரி தான்.
உமையாள்: Object gerundன்னா என்ன பாட்டி?
மித்ரன்: Gerund னாலே verb கூட ing சேர்க்கணும்.
இசை: அதுதான் நேத்தே பார்த்தோமே, அப்புறம்?
மித்ரன்: Verb ஆனது subjectஆ வர்ற மாதிரி, object ஆகவும் வரும்னு சொல்லுவாங்க பாரேன்.
இனியன்: எப்புட்றா?
பாட்டி: Brillant மித்ரன். Object Gerund ஆனது ஒரு வாக்கியத்தில் நேரடிப் பொருளாக செயல்படும்.
இசை: இதை எப்படி பயன்படுத்த வேண்டும்?
உமையாள்: "I like swimming." இதை கொஞ்சம் விளக்குங்க பாட்டி.
பாட்டி:
1. Identify the Verb's Action (வினைச்சொல்லின் செயலை முதலில் அடையாளம் கண்டு கொள்ளவும்)
Verb’s action is “like“.
2. அடுத்து "What?" or "Whom?" என்ற கேள்வியை verbன் மீது கேட்க வேண்டும்?
What do I like? (Answer: "swimming")
3. ஒரு பெயர்ச்சொல் object இன் இடத்தில் தேவையா என்பதைக் கவனிக்க வேண்டும்.
(நீச்சல் என்பது ஒரு செயல். ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது இடம் அல்லது பொருள் அல்ல.
அதனால் பெயர்ச்சொல் இங்கு தேவை இல்லை.)
4. இப்போது object ன் இடத்தில் object Gerund ஐ சேர்க் கவும். உங்களுக்கான sentence கிடைத்து விட்டது.
உமையாள்: I like swimming க்கு பின்னால் இப்படி ஒரு கதையா. கேட்கவே ஆச்சரியமாக இருக்குது.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்