

இனியன்: swimming மாதிரி ஒரு அருமையான உடற்பயிற்சி எதுவுமே கிடையாது தெரியுமா?
உமையாள்: உனக்கு swimming பிடிக்குங்கிறதுனால அப்படி சொல்லுற.
மித்ரன்: நான் கூட சொல்லுவேன் ரன்னிங் (running) தான் சிறந்த உடற்பயிற்சின்னு.
இசை: நீ அத்லெட் (athlete) ஆ?
மித்ரன்: இல்லை. நல்ல ஓடுவேன்.
உமையாள்: நானும் சொல்லுவேன் சைக்ளிங் (cycling) தான் சிறந்த உடற்பயிற்சின்னு.
இசை: உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா?
உமையாள்: மத்தவங்க சைக்கிள் ஓட்டி நான் பார்த்திருக்கிறேன்.
இசை: இதோ பாட்டி வந்துட்டாங்க. அவங்க கிட்டயே கேட்போம்
இனியன்: நீங்க சொல்லுங்க பாட்டி. Which one is the best exercise?
பாட்டி: ஒவ்வொரு exerciseலையும் ஒவ்வொரு விதமான பலன் நமக்கு கிடைக்கும்.
இசை: Exactly பாட்டி. இதுதான் மிகச் சிறந்ததுன்னு நாம சுருக்கிவிடக் கூடாது.
பாட்டி: இனியன், நீ எல்லார் கிட்டயும் நான் வருவதற்கு முன்னாடி என்ன சொல்லிட்டு இருந்தன்னு சொல்லு.
இனியன்: swimming தான் சிறந்த உடற்பயிற்சின்னு சொன்னேன் பாட்டி.
பாட்டி: சரி. நீ சொன்னதுல subject எது?
இனியன்: அய்யயோ, பாட்டி. Subjectஅ காணோம்.
மித்ரன்: என்ன டா சொல்லுற.
இனியன்: Swimங்கிறது verb ஆச்சே.
இசை: Swimming என்பது continuous tense verb தானே?
மித்ரன்: அட ஆமாம். நானும் இப்போதான் பார்க்கிறேன்.
இனியன்: இப்போ subject இல்லாம எப்படி sentence அமைக்கிறது?
உமையாள்: டென்ஷன் ஆகாத டா.
இனியன்: பாட்டி, நான் சொன்னதுல subject இல்லை.
மித்ரன்: எனக்கு swimming பிடிக்கும்னு சொல்லலாமா?
இனியன்: அப்படி சொல்லும் போது, swimming ஒரு சிறந்த உடற்பயிற்சி என்பது எப்படி தெரிய வரும்.
பாட்டி: Swimming என்பதே ஒரு subjectன்னு சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
இனியன்: என்னது, verb ஒரு subject ஆ?
மித்ரன்: இது ரொம்ப ஆச்சரியமாக இருக்குதே!
பாட்டி: வினைச்சொற்கள் தேவைப்படும் இடத்தில் பெயர்ச்சொல்லாக செயல்படும். இந்த concept ற்கு பெயர் Gerund.
இசை: நல்லவேளை. இப்படி ஒரு concept நமக்கு கிடைச்சது.
பாட்டி: இது ஒரு வினைச்சொல்லின் அடிப்படை வடிவத்தை எடுத்து அதில் “-ing” ஐ சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது.
உமையாள்: ஓ. இது செம சூப்பர்ல. Verb கூட ing சேர்த்தால் போதும். Gerund நமக்கு கிடைச்சிடும்.
பாட்டி: இது, ஒரு வாக்கியத்தில் செயல்கள்(actions), செயல்பாடுகள்(activities) ஐ subject ஆக வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.
இசை: Ok பாட்டி. Gerunds ஐ நாம் ஏன் கற்க வேண்டும்?
பாட்டி: சிக்கலான வாக்கிய அமைப்புகளைப் (complex sentence) ஐ புரிந்துகொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் Gerunds ஐ கற்றுக்கொள்வது அவசியம்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்