

இனியன்: நாம நிறைய phrasal verbs பார்த்தாச்சு. இல்லையா?
மித்ரன்: இவற்றை நாம் அதிகமாக பயன்படுத்தினால் தான் நமக்கு ஞாபகத்தில் இருக்கும். சரிதானே?
பாட்டி: அது தான் இல்லை. Phrasal verbs ஐ குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இசை: அப்படியென்றால் இதற்கு மதிப்பு இல்லையா?
பாட்டி: Phrasal verbs ற்கும் மதிப்பு இருக்கிறது.
உமையாள்: அப்புறம் ஏன் பாட்டி, இதை அதிகமாக பயன்படுத்தக் கூடாது ன்னு சொல்லுறீங்க.
பாட்டி: அளவுக்கு மீறி பயன்படுத்தும் போது, அது கேட்பவர்களுக்கு முறையற்ற வாக்கியமாக கூடத் தோன்றி விடும்.
மித்ரன்: புரியுது பாட்டி.
பாட்டி: முடிந்த அளவிற்கு ஒரு வார்த்தை கொண்ட வினைச்சொற்களை (verbs) பயன்படுத்துங்கள்.
Phrasal verbs ஐயும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்