கொஞ்சம் technique கொஞ்சம் English 201: Phrasal verbs – particle “up” - ஒரே மாதிரியான செயல்கள் - தொடர்கிறது

கொஞ்சம் technique கொஞ்சம் English 201: Phrasal verbs – particle “up” - ஒரே மாதிரியான செயல்கள் - தொடர்கிறது
Updated on
1 min read

மித்ரன்: எதுக்கு பாட்டி phrasal verbs ஐ group பண்ணுறோம்.

இனியன்: அதுவும் different varieties.

பாட்டி: Phrasal verbs ஐ குழுக்களாக வகைப்படுத்துவதன் மூலம், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் (Organized Approach) வார்த்தைகளை நாம் கற்றுக் கொள்ள முடியும்.

உமையாள்: ஆமாம் பாட்டி.எந்த ஒரு செயலும் Organized Approach இல் செய்யும் போது பலன் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

பாட்டி: குறிப்பிட்ட குழுக்களை (specific groups) மையமாகக் கொண்டு படிக்கும் போது நாம் கற்றுக்கொள்ளக் கூடிய வார்த்தைகள் அதிகரிக்கும்.

இசை: அது உண்மை தான் பாட்டி. Class ல group ஆ பிரிச்சு ஒவ்வொரு group க்கும் ஒரு பொறுப்பை கொடுக்குறதுனால நிறைய வேலை நடக்குது.

பாட்டி: Themes or meanings மூலம் phrasal verbs ஐ தொகுக்கும் போது கற்பவர்கள் வெவ்வேறு சூழல்களில் அவற்றின் பயன்பாட்டைப் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

மித்ரன்: சரி பாட்டி. இனிமேல் நானும் themes ஐ மனதில் வைத்து பேசி பார்க்கிறேன்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in