கொஞ்சம் technique கொஞ்சம் English 198: Phrasal verb ஐ இப்படியும் படிக்கலாம்!

கொஞ்சம் technique கொஞ்சம் English 198: Phrasal verb ஐ இப்படியும் படிக்கலாம்!
Updated on
1 min read

பாட்டி: ஆயிரக்கணக்கான phrasal verbs பழக்கத்தில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

மித்ரன்: அடேங்கப்பா. அத்தனையையும் நாங்கள் படிக்க வேண்டுமா?

பாட்டி: முதலில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிப்போம்.

இனியன்: சரி பாட்டி.

பாட்டி: உங்களுக்கு பேச்சு வழக்கில் அதிகமாக பயன்படுத்தக் கூடிய 100 phrasal verbsஐ இந்த நான்கு நாட்களில் கொடுத்திருக்கிறேன்.

உமையாள்: இதை எப்படி effective ஆக பயன்படுத்தலாம் என்று சொல்லுங்களேன்.

பாட்டி: Verb ஐயும் particle ஐயும் தனித்தனியாக பிரித்து particle ஐ வைத்து group செய்யும் போது இன்னும் clear ஆக புரிய ஆரம்பிக்கும்.

இசை: What’s a particle பாட்டி?

பாட்டி: Phrasal verbஇல் verbற்கு அடுத்து வரக் கூடிய adverb அல்லது prepositionஐ particle என்று சொல்லலாம்.

Example ஒன்று சொல்லுங்களேன்.

உமையாள்: இந்த மூன்று phrasal verbs யிலும் common ஆக out என்ற particle இருக்கிறது.

பாட்டி: விற்றுவிட்டது, அணைந்து விட்டது, துண்டிக்கப்பட்டு விட்டது போன்ற அர்த்தங்களை இந்த வாக்கியங்கள் நமக்கு கொடுக்கின்றன.

இசை: Out என்ற வார்த்தையை நேரடியாக மொழி பெயர்த்தால் “வெளியே” என்ற அர்த்தம் நமக்கு கிடைக்கும்.

உமையாள்: இந்த வார்த்தை Verb உடன் சேர்த்து phrasal verbஆக வரும் போது, “தீர்ந்து விடுகிறது” என்ற அர்த்தம் நமக்கு கிடைக்கிறது.

பாட்டி: புரியுதா?

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in