கொஞ்சம் technique கொஞ்சம் English 196: Phrasal verb - ஏன்? எதற்கு?

கொஞ்சம் technique கொஞ்சம் English 196: Phrasal verb - ஏன்? எதற்கு?
Updated on
1 min read

இசை: Formal writingஇல் Phrasal verbஐ பயன்படுத்தக் கூடாது என்றால் எதற்காக இதை படிக்க வேண்டும் பாட்டி?

இனியன்: இருக்குற verbsஐ வைத்தே நாம் sentenceஐ frame பண்ண முடியுமே.

மித்ரன்: இதை தெரிந்து கொள்வதால் நமக்கு என்ன பயன்?

பாட்டி: ஒரு கேள்வி கேட்கிறேன். யோசித்து பதில் சொல்லுங்கள். நமது பேச்சு வழக்கும், எழுத்து நடையும் ஒன்றாக இருக்கிறதா?

உமையாள்: அது எப்படி ஒன்றாக இருக்கும். பேசுவது எல்லாம் casual ஆக இருக்கும்.

இனியன்: ஒவ்வொரு ஊரைப் பொறுத்து பேச்சு நடை மாறுமாடும்.

உமையாள்: எழுதும் போது அப்படி எல்லாம் எழுத முடியாதே.

மித்ரன்: அப்படி எழுதினால் அந்த ஊரைத் தாண்டி அடுத்த ஊர் காரருக்கே புரியாது.

பாட்டி: அதே தான் இங்கும். Phrasal verb ஐ Native English Speakers அதிகமாக பயன்படுத்துவார்கள்.

அப்படி ஆரம்பித்து அது கண்டம் தாண்டி அனைத்து நாடுகளுக்கும் பரவி விட்டது.

இசை: நம்ம ஊரு slang மாதிரி ன்னு சொல்லுங்க.

பாட்டி: ஆமாம். நம்மில் ஒருத்தர் Native English Speaker ஐப் போல் Phrasal verb ஐ பயன்படுத்தி பேசும் போது, கேட்கிற நமக்கு புரிய வேண்டுமல்லவா?

மித்ரன்: கண்டிப்பாக பாட்டி.

பாட்டி: அதே போல், நாமும் ஏன் Native English Speaker ஐப் போல் பேசக் கூடாது!

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in